குடிப்பழக்கம்.! போதைக்கு அடிமை.! குப்பை பெருக்குதல்.! தெருவில் பிச்சை எடுத்த பிரபல முன்னணி நடிகர்.!

0
370
Sanjay-dutt-Actor
- Advertisement -

சர்ச்சை நாயகனாகப் பாலிவுட்டில் வலம் வந்த சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படம் `சஞ்சு’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்கபீர் கபூர் நடித்திருக்கிறார். இந்த படம் நாளை (ஜூன் 29) வெளியாகவுள்ளது.

sanjay dutt

படத்தின் திரைக்கதையை அபிஜத் ஜோஷியுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி எழுதியிருக்கிறார்.மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், தியா மிர்சா, பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் சஞ்சய் தத்தின் பல சர்சைக்குரிய விடயங்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

- Advertisement -

இந்த படத்தை பற்றி நடிகர் ரன்கபீர் கபூர் கூறுகையில்”சஞ்சய் தத், சிறுவதில் போதை பொருளுக்கு அடிமையானது குறித்தும், அவர் போதை பொருளை வாங்க தெரு தெருவாக பிச்சை எடுத்த கட்சிகளும், குப்பை பொறுக்கிய காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Actor sanjay-dutt

போதை பொருளுக்கு அடிமை, கேர்ள் ஃப்ரெண்ட்ஸ், நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என சஞ்சய் தத் வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் படமாக எடுக்கப்பட்டுள்ளதாள், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆதரித்துள்ளது.

Advertisement