சந்தானத்தின் முதல் படம் வல்லவன் கிடையாது. அவர் நடிச்ச முதல் படமே இதான்.

0
44853
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்கு நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடிகர் சந்தானம் நடித்து இருந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : நீ ஏன் அங்க நிக்குற. இங்க வா- ஷூட்டிங்கில் ஜோதிகாவிடம் கூறியுள்ள பரவை முனியம்மா. ஏன் தெரியுமா?

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சிம்பு நடித்த மன்மதன் திரைப்படம் தான் சந்தானத்திற்கு முதல் படம் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், அந்த படம் சந்தானத்திற்கு முதல் படம் இல்லை. நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமான காதல் அழிவதில்லை படம் தான் சந்தானத்திற்கு முதல் படம்.

2002 ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தான் காதல் அழிவதில்லை. இந்த படத்தில் சிம்பு, சார்மி, கருணாஸ், சீதா, மோனிகா, நளினி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மக்கள்’மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் கல்லூரி மாணவராக இருக்கும் சிம்புவுக்கு நண்பராக சந்தானம் நடித்திருப்பார்.

இதையும் பாருங்க : பேகி pant குறித்து கேட்டுள்ள சூப்பர் ஸ்டார், தாடியின் ரகசியம் – பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல்.

-விளம்பரம்-

காதல்அழிவதில்லை படம் தான் நடிகர் சந்தானத்தின் முதல் படம். மேலும், சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் பஞ்சமே இல்லை. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் தன்னுடைய விடா முயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

Advertisement