தென்னிந்திய சினிமா வரலாற்றில் சர்கார் படைக்கவிருக்கும் புதிய சாதனை !

0
524
Vijay Sarkar
Vijay Sarkar

தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் . இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது.

sarkar 2
சர்க்கார்

சர்க்கார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதலே அரசியல் ரீதியான பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால் படக்குழுவினர் அதை எதையும் பொருட்படுத்தி கொண்டதாக தெரியவில்லை. அவர்கள் திரைப்படத்தை வெளியிடுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரயமாக செய்து வருகின்றனர்.

sarkar-movie
சர்க்கார்

தற்போது வெளிவந்துள்ள செய்தி, விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சர்கார் திரைப்படத்தின் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். உலகம் முழுவதும் வெளியிட அவர்கள் கொடுத்து வாங்கியுள்ள விலை ஏறத்தாழ  ரூ. 100 கூடி என கூறப்படுகிறது.

vijayதிரைப்படம் வெளியாவதற்கு முன்பே சர்கார் படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தை கணக்கிட்டு பார்த்தால் கிட்டதட்ட  ரூ. 150  கோடியை தாண்டி செல்கிறது. இது தான் தளபதி விஜய் படத்தின் அதிகப்படியாக  வியாபாரம் ஆகிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அறிந்த சினிமா துறையினர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.