சர்கார் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி..! மெர்சல் பிரச்சனையை தகர்த்த சர்கார்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
1033
Sarkar
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் A.R. முருகதாஸ் ஆகியோரது கூட்டணியில் மூன்றாவதாக வெளியாக உள்ள படம் ‘ சர்க்கார் ‘ . இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர காத்துக்கொண்டிருக்கிறது. படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் வரலக்ஷ்மி சரத்குமார் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.

தற்போது, இந்த படத்தில் எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை என்று ‘ NO OBJECTION CERTIFICATE ‘ விலங்கு நல வாரியத்தால் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சர்க்கார் படக்குழுவினரும் மற்றும் விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால், மெர்சல் படத்திற்கு இந்த சான்றிதழ் அளிக்காததால் தான் மெர்சல் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

-விளம்பரம்-

இப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. படத்தின் சிங்கிள் ட்ராக் செப்டெம்பர் 24 ஆம் தேதி சன் பிக்சர்ஸ் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த தீபாவளியை விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட தயாராகி வருகினறனர்.

Advertisement