‘சர்கார் ‘டீஸருக்கே திரையரங்குகளை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்..! சர்கார் ஆதிக்கம் ஆரம்பம்..!

0
78
Sarkar
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் டீஸர் தான் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

ரோகினி திரையரங்கம்:

சன் பிக்சர்ஸ்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடபட்டது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்த டீஸர் யூடுயூபில் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது.

- Advertisement -

வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீஸரே விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பண்டிகை போல அமைந்துள்ளது. இந்த படத்தின் டீசரை சென்னையில் உள்ள ரோகினி, ராக்கி திரையரங்கம் நேரடியாக வெளியிட்டது.

ராக்கி திரையரங்கம்:

சர்கார் படத்தின் டீசரை காண்பதற்காக ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு குவிந்தனர். மேலும், பட்டாசு வெடித்து, மேள தாளம் அடித்தும் ஒரு படம் வெளியானது போல சர்காரின் டீசரை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement