1985ல் கமல் தான் எங்க ஊரு பையன் நல்லா மிமிக்ரி பண்ணுவான்னு அறிமுகம் பண்ணி வச்சார் – மயிலசாமி குறித்து கலங்கிய சத்யராஜ்.

0
507
sathyaraj
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

இதில் மயில்சாமிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு மயில்சாமி மாரடைப்பால் காலமாக இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்று இசை கச்சேரி செய்து இருந்தார். இதில் மயிலசாமியும் கலந்துகொண்டு இருந்துள்ளார். விடிய விடிய சிவராத்திரி பூஜையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மயிலசாமி தீவிர சிவ பக்தர், இவர் ஒவ்வொரு கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று சிவனை வழிபடுவதும் வழக்கம், தீவிர சிவ பக்தரான இவர் நேற்று சிவராத்திரி தினத்தில் சிவனடி சேர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மயிலசாமியின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சத்ய ராஜ் ‘எனக்கு 1985 லிருந்து மயில்சாமி பழக்கம். எனக்குள் ஒருவன் படத்தின் போது கமல் சார் தான் மயில்சாமி அழைத்து எங்க ஊரு பையன் சத்யராஜ் நன்றாக மிமிக்ரிகி செய்வான் என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தீவிரமான எம்ஜிஆர் ரசிகன் யாருக்கு உதவி வேண்டுமானாலும் தயங்காமல் செய்வான். எனக்கு உரிமையோடு போன் செய்து கேட்பான். 57 வயசு எல்லாம் ஒரு வயசு இல்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement