படத்தின் பெயர் மட்டும் டக்கரா? இல்ல படமே டக்கரா? – ‘டக்கர்’ படத்தின் முழு விமர்சனம் இதோ.

0
1935
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் சித்தார்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டக்க.ர் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கிறது. கார்த்திக் ஜி கிரிஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் திவ்யான்ஷா, யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நீண்ட கால தயாரிப்பிற்கு பிறகு இந்த படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கதாநாயகன் குணசேகரன் பணக்காரன் ஆக வேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார்.
பின் அவர் ரெஸ்டாரன்ட், பார், ஜிம் என்று ஒவ்வொரு இடத்திலும் வேலை தேடி அலைகிறார். ஆனால், அவர் அங்கு பல அவமானங்களை சந்திக்கிறார். இருந்தாலும், தன்னுடைய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். இதனால் கதாநாயகன் குணசேகரனுக்கு நிரந்தர வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பின் எல்லா வேலைகளையும் விட்டு கடைசியாக இவர் பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார். சென்னையில் போதை பொருள், ஆள் கடத்தல், ரவுடிசம் ஆகிய அனைத்தும் கிடைக்கும் ஒரு இடம் இருக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்த ஏரியாவிற்கு சித்தார்த் வருகிறார். பின் அங்கிருந்த கார் ஒன்றை சித்தார்த் எடுத்துச் செல்கிறார். அந்த காரில் பணக்கார பெண் ஒருவர் கடத்தப்பட்டு இருக்கிறார். அவர்தான் படத்தின் கதாநாயகி.

இறுதியில் இவர்கள் எப்படி இருவரும் இணைகிறார்கள்? சித்தார்த் தன் லட்சியத்தை அடைந்தாரா? எதற்காக அந்த பெண்ணை கடத்துகிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். வழக்கம்போல் தன்னுடைய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதி முழுவதுமே நடிகர்களுடைய அறிமுகத்திலேயே சென்று விடுகிறது. இரண்டாம் பாதியாவது கொஞ்சம் விறுவிறுப்பாக செல்லும் என்றால் பொறுமையாக சென்று படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்.

-விளம்பரம்-

மேலும், படத்தில் வரும் யோகி பாபு நகைச்சுவை காட்சிகள், சில பாடல்கள் மட்டுமே படத்திற்கு ஆறுதலை கொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த்தின் டக்கர் படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இந்த படம் ஏமாற்றம்தான். பணக்காரன்- ஏழை என்ற கான்செப்டில் நிறைய படங்கள் வந்திருக்கிறது. இதை இயக்குனர் கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லி இருந்தால் படம் ஓடி இருக்கும். டக்கர் என்று டைட்டில் வைத்துவிட்டு கதைக்களத்தில் இயக்குனர் சொதப்பி விட்டார்.

நிறை:

யோகி பாபுவின் நகைச்சுவை

படத்தில் சில பாடல்கள் ஆறுதல் கொடுக்கிறது

சித்தார்த்தின் நடிப்பு

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு நிறைகளுமே இல்லை

குறை:

இயக்குனர் கதைகளத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்

முதல் பாதி முழுவதும் நடிகர்கள் அறிமுகத்திலேயே செல்கிறது

இரண்டாம் பதி ரொம்ப பொறுமையாக செல்கிறது

கதைக்களத்தில் விறுவிறுப்பு சுவாரசியம் எதுவும் இல்லை

மொத்தத்தில் நீண்ட இடைவெளி பிறகு சித்தார்த்தின் டக்கர்- மக்கர் பண்ணிவிட்டது

Advertisement