விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். அதன் பின்னர் அதன் பின்னர் ஆபிஸ் தொடரிலும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்குபெறுள்ளார்.
ஜோடி நிகழ்ச்சிக்கு பின்னர் மூன்று வருடங்களாக சீரியல் வாய்ப்பு இல்லாமல் இருந்தார் கார்த்திக் அதற்கு முக்கிய காரணமே இவரது திருமண வாழ்க்கை தான். கார்த்திக் கல்லூரி படிக்கும் போது யாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்க : திருமணமான கார்த்திக்கை காதலிக்கிறாரா செம்பருத்தி தொடர் நடிகை ஷபானா..!அவரே சொன்ன ரகசியம்..!
திருமணத்திற்கு பின்னர் நடிகர் கார்த்திக் சினிமாவில் நுழைந்தார். அவர் 465, நாலு பேருக்கு நல்லதுன்னா ஏதும் தப்பில்லை போன்ற படங்களில் நடித்தார். ஆனால், சினிமாவில் நுழைந்த பிறகு கார்த்திக் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்துள்ளார், இதனை அவரே ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இதனால் மேலும், குடும்ப வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சனை. இதனால் திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் இல்லாத கார்த்திக்கு ‘செம்பருத்தி’ சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அந்த சீரியல் மூலம் ஒரு திருப்பு முனையை சந்தித்துள்ளார் கார்த்திக்.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 21) கார்த்திக் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை ‘செம்பருத்தி’ சீரியல் நடிகர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.