நடு ரோட்டில் கேவலமாக திட்டிய மக்கள்! அம்மா,அப்பா முன் அசிங்கப்பட்ட மானஸ்.! ஏன் தெரியுமா..?

0
915
manas-chavali

சினிமா வில்லன்களை மக்கள் நிஜ வாழ்விலும் வில்லனாகத்தான் நினைக்கின்றனர். எம் ஜி ஆர், சிவாஜி காலத்தில் கூட வில்லன் நடிராக இருந்த நம்பியாரை மக்கள் நிஜ வாழ்விலும் வில்லன் என்று தான் நினைத்தார்களாம்.சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் வில்லன் நடிகர்களை நிஜ வாழ்விலும் வில்லனாக தான் பார்க்கின்றனர் என்றால் உங்களால் அதை நம்ப முடியுமா. ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். இது போன்ற ஒரு இக்கட்டான நிலையை தான் பிரபல சீரியல் நடிகர் மானஸ் சவாலி சந்தித்துள்ளாராம்,

maanas-chavali

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி ‘ தொடரில் நடித்துவரும் இவர், ஒரு சில பிரபலமான தொடர்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தனது பெற்றோர் முன்னாள் மக்கள் தன்னை கேவலமாக திட்டிய ஒரு அனுபவத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“ஒரு நாள் என் தம்பியை பஸ் ஏற்றிவிட வெளியே சென்றேன். அப்போது எனது அம்மா, அப்பா இருவரும் உடன் இருந்தனர். அப்போது என்னை பார்த்த மக்கள் சிலர் நான் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை மனதில் வைத்துக் கொண்டு நான் நிஜ வாழ்விலும் வில்லனாகத்தான் இருப்பேன் என்று எண்ணி, என் பெற்றோர்கள் முன்னிலையில் என்னை கேவலமான வார்த்தைகளில் திட்டி தீர்த்தனர்.

maanas

அவர்கள் திட்டிய வார்த்தைகளை என்னால் வெளியில் கூட சொல்ல முடியவில்லை. அவர்கள் திட்டியதர்காக நான் அவர்கள் மீது கோபமும் கொள்ளவில்லை. ஏனெனில் எனது கதாபாத்திரம் இந்த அளவிற்கு பிரபலமடைந்து விட்டதை எண்ணி நான் ஒரு பக்கத்தில் சந்தோச பட்டுக்கொண்டேன் ” என்று தெரிவித்துள்ளார்.