சின்னத்தம்பி சீரியல் வில்லி கிருத்திகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா..? புகைப்படம் உள்ளே

0
3389

சின்னத்திரை நடிகை கிருத்திகா, இவர் 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் “கேளடி கண்மணி” , “வம்சம்” , “செல்லமே” போன்ற பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார்.

actress krithika

சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து இவர் கலைஞசர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், திடகாத்திரமாக இருப்பதால் இவருக்கு பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரமாகவே அமைகிறது.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சின்னத்தம்பி” என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த தொடரிலும் வில்லலியாக நடித்து அசத்தி வரும் இவர் சில வருடங்களுக்கு முன்னர் அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். தற்போது இவர்களது மகனுக்கு 5 வயது ஆகிறது. சமீபத்தில் நடிகை கிருத்திகா தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரளாக பரவி வருகிறது. மேலும், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.