‘முழுவதுமாக விலகுகிறேன்’ – ஒரே ஆண்டில் ஏற்பட்ட கணவரின் பிரிவால் பிரியங்கா எடுத்த திடீர் முடிவு.

0
695
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போட்ட ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா. இவர் முதலில் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழில் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே நடிகை பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை காதலித்து வந்தார்.பின் பிரியங்காவிற்கும் ராகுலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு நிச்சயதார்தம் முடிந்தது. ஆனால், சில காரணங்களால் இவர்கள் திருமணம் நின்று விட்டது. பின் சில மாதங்களுக்கு முன் தான் ப்ரியங்காவிற்கும் ராகுலுக்கும் விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்றது.

- Advertisement -

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.மேலும், திருமணத்திற்கு பின் பிரியங்கா சீரியலில் நடித்து கொண்டு தான் வந்தார். ஆனால், அவர் கணவருக்கு பிரியங்கா நடிப்பதில் விருப்பம் இல்லை என்று சொன்னதால் சீதாராமன் சீரியலில் இருந்து நாயகி பிரியங்கா வெளியேறி விட்டார். அவருக்கு பதில் தற்போது வேறு ஒரு நடிகை சீதா ரோலில் நடித்து வருகிறார். எ

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயமந்தி தொடரில் பிரியங்கா நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிரியங்கா தனது கணவரை பிரிந்துவிட்டதாக செய்திகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதற்க்கு முக்கிய காரணமே திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பகிர்ந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய நீக்கி இருக்கிறார். மேலும், சமீப நாட்களாக சோகமான பதிவுகளை போட்டு வருகிறார்.

-விளம்பரம்-

இதனால் பிரியங்கா தனது கணவரை பிரிந்துவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளம் வாயிலாக நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய பிரியங்காவிடம் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் ஆமாம் என பதில் அளித்துள்ளார். இதனால் பிரியங்கா தனது கணவரை பிரிந்தது உண்மை தானோ என்று அவரது ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ள பிரியங்கா ‘ ன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை முழுவதும் நீக்க போகிறேன். எனக்கு விளம்பரத்திற்காக பலர் புடவை, நகைகள் அனுப்பி இருப்பதால் நாளை மதியம் வரை இருப்பேன். நான் அனைத்தயும் சரியாக திருப்பி உங்கள் விலாசம் மற்றும் தொலைபேசி என்னை அனுப்புங்கள். என் மீது அதிக அன்பையும் அக்கறையையும் காட்டிய அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement