வேலையில்லாத வெட்டிப் பசங்க மீம்ஸ் பத்தி கவலை இல்லை.! சீரியல் நடிகை அதிரடி .!

0
487
Ranthiya-Actress

நடிப்புல மட்டும்தான் எப்போதும் கவனம் செலுத்துவேன். என்னைப் பத்தி பெரிசா எந்த விமர்சனங்களும் வந்ததில்லை. வந்தாலும் அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன். அதனால்தான் பல வருஷமா ஃபீல்டில் இருக்கேன்” எனப் புன்னகையுடன் பேசுகிறார் ரிந்தியா. `சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்துவருபவர்.

Rinthiya

தமிழ்ல சின்ன இடைவெளிக்குப் பிறகு நடிக்கிற மாதிரி தெரியுதே:
தமிழ்ல ஹிட்டான `தெய்வமகள்’ சீரியல்ல அண்ணியார் கேரக்டரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த சீரியலின் மலையாள ரீ-மேக்கான `பாக்கிய லஷ்மி’ல நான் காயத்ரி ரோல்ல நடிச்சேன். ஒரே நேரத்தில் அதிகபட்சம் ரெண்டு சீரியல்லதான் நடிப்பேன். அப்படி, மலையாளத்தில் நடிச்சுக்கிட்டே தமிழ்ல்ல `கல்யாணப்பரிசு’ சீரியல்ல நடிச்சேன். இப்பவும் ஒரு மலையாள சீரியல்ல நடிச்சுகிட்டே, `சரவணன் மீனாட்சி’ சீரியல்லயும் நடிக்கிறேன். அதனால ஆக்டிங்ல பிரேக்ங்கிற பேச்சுக்கே இடமில்லை.

சரவணன் மீனாட்சி’ சீரியல், அதுல நடிக்கிறவங்களைப் பத்தி வர்ற மீம்ஸ், ட்ரோல் பார்ப்பீங்களா.?
நெல்லு விளையிறப்போ, கூடவே களையும் வளரும். அதனால வருத்தப்படாம, அதை நீக்கிட்டு போயிட்டே இருக்கணும். அப்படித்தான் இந்த விஷயத்தையும் கடந்து போகணும். எந்த ஒரு விஷயமும் மக்களோட அதிக கவனத்தை ஈர்க்கிறபோது, அது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும். `சரவணன் மீனாட்சி’யில நடிக்கிற ரக்‌ஷிதாவை சோஷியல் மீடியாவுல அதிகம் விமர்சனம் செய்வாங்க. அவங்க நடிப்புக்குக் கிடைச்ச வெற்றினுதான் நான் பார்ப்பேன். இதையெல்லாம் தாண்டியும், அவங்க மூணு சீசன் வரைக்கும் போல்டா நடிச்சுகிட்டு இருக்கிறதே பெரிய விஷயம். இதை ரக்‌ஷிதாகிட்ட பலமுறை நேர்லயே சொல்லிப் பாராட்டியிருக்கேன்.

Actress Rinthiya

ஆனானப்பட்ட ரஜினிகாந்த் சாரையே பெரிசா கலாய்ச்சு விமர்சனம் பண்றாங்க. நாமெல்லாம் இதுக்காகக் கவலைப்பட்டா வளரவே முடியாது. வேலையே இல்லாத வெட்டிப் பசங்க சிலர் பண்ற இந்த மாதிரியான செயல்பாடுகளைப் பெரிசா கண்டுக்கக் கூடாது. நம்ம வேலையில நாம முழு மனதோடு கவனம் செலுத்தினாலே போதும். என்னைப் பத்தி மீம்ஸ் போட்டிருக்காங்களானு தெரியலை. அப்படிச் செஞ்சாலும் கவலைப்படமாட்டேன்.