40 வயது மேலாகியும் கல்யாணம் பண்ணல..! என் உலகமே இவங்கதான்..! சீரியல் நடிகை யுவஸ்ரீ சொன்ன காரணம்

0
73110
- Advertisement -

வெள்ளித்திரை, சின்னத்திரை என மீடியாவுக்குள் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பயணித்து வருபவர் யுவஶ்ரீ. பெரும்பாலான தமிழ் சீரியல்களிலும், தியேட்டர் பிளே -களிலும் இவரைப் பார்க்க முடியும். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்து வருகிறார். அவரிடம் பேசும் முன்பு அவருடைய குட்டி பயோ..!

-விளம்பரம்-

actress yuvasri

- Advertisement -

பெயர் : யுவஶ்ரீ
பிரபலமான சினிமா : சின்ன தம்பி, காவலன்
பிரபலமான சீரியல் : அலைகள்
தற்போது செய்துகொண்டிருப்பது : `பொன்மகள் வந்தாள்’ சீரியல்
மீடியா பயணம் : கிட்டத்தட்ட 25 வருடங்கள்
ஃபேமிலி : ஹேப்பி பேச்சுலர்
எதிர்காலத் திட்டம் : நடிப்பு.. நடிப்பு.. நடிப்பு

என்னுடைய பதினெட்டு வயசுல வெள்ளித்திரையில் அறிமுகமானேன். ஒருசில தமிழ்ப் படங்களில் நடிச்சேன். அதுல குறிப்பா `சின்ன தம்பி’ படம் மக்கள்கிட்ட என்னைக் கொண்டு போச்சு. அதுக்கப்புறம் சில படங்கள்ல நடிச்சேன். பிறகுதான் சின்னதிரை வாய்ப்பு வந்தது. தூர்தர்ஷனில் வெளிவந்த `நரகாசுரன்’ சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தேன். சன்டிவியில் கே.பி. சாருடைய `ரகுவம்சம்’ சீரியலில் என்ட்ரின்னு என் பயணம் ஆரம்பிச்சது இப்படித்தான்.

-விளம்பரம்-

முன்னாடி இருந்த மாதிரி சீரியல் வாய்ப்பு எனக்கு இல்லை. புதுமுகங்களையே விரும்புற இவங்க லாஜிக் எனக்குப் புரியவே இல்லைங்க. மக்கள் மத்தியில் பிரபலமான முகங்களைப் பார்க்குறதுக்காகத்தான் சீரியல் பார்ப்பாங்க. ஆனா, ஒவ்வொரு சீரியலுக்கும் தொடர்ந்து புது ஆள்களை மாத்திகிட்டே இருந்தா எப்படி… சீரியல் ஆர்டிஸ்ட் எல்லோருக்குமே இந்தக் கஷ்டம் இருக்குது.

yuvasri

நான் ஒய்.ஜி. மகேந்திரன் சாருடைய நாடகக் குழுவில் இருக்கிறேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நாடகம் பண்ற அன்னைக்கு எனக்கு சீரியல் ஷூட் வெச்சிருந்தாங்க. நான் சீக்கிரம் கிளம்பணும், எனக்கு நாடகம் இருக்குன்னு டைரக்டர்கிட்ட அனுமதி கேட்டேன். அப்போ அவர், இல்லங்க நீங்க இருந்துதான் ஆகணும் ; நாங்கதான் டேட்ஸ் கொடுத்துருக்கோம்ல.. நீங்க வேணும்னா டிராமாவில் நடிக்க வேற ஆளை செலக்ட் பண்ண சொல்லுங்கன்னு சொன்னார். எனக்கு சிரிப்பு வந்திருச்சு. நாடகம் பற்றின சரியான புரிதல்கள்கூட அவங்ககிட்ட இல்ல பாருங்க. நாடகத்துக்கு எப்படி திடீர்னு ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ண முடியும். அது என்ன சீரியல் ஷூட்டிங்கா இன்னைக்கு இல்லன்னா நாளைக்குன்னு ஃபிக்ஸ் பண்றதுக்கு. அதுக்கப்புறம் நிறைய போராடி நாடகத்துல நடிக்கப் போனேன். ஆனா, சீரியல் இயக்குநர்கள சொல்லியும் தப்பில்லைங்க. அவங்க சூழ்நிலை அப்படி…!

முன்னாடியெல்லாம் சீரியலில் நடிக்கிறப்ப அந்த கேரக்டரை உள்வாங்கி நடிக்க நமக்கு நிறைய டைம் இருக்கும். இப்போ அப்படி கிடையாது. அவங்க எதிர்பார்க்கிறதை உடனுக்குடன் செய்யணும். இதெல்லாம் விட ஏதாவது கோபமா எதிர்த்துப் பேசிட்டா, உடனே அந்த சீரியலிலிருந்தே தூக்கிடுவாங்க. இதுக்கு மத்தியில்தான் சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன்.

yuvasri

என்னுடைய குடும்பச் சூழலுக்காகத்தான் சீரியல், நாடகத்துல ஓட ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல நான் திருமணம் செஞ்சுக்கணும்னு நினைச்சப்போ சரியான வரன் அமையல. அதுக்கப்புறம் பச்… வயசு போயிருச்சு. சரி, இதுதான் நம் வாழ்க்கைன்னு அதையும் ஏத்துக்கிட்டேன். என் உலகமே என் அம்மாதான். இந்த நடிப்புத் துறை எனக்குப் பெரிய சக்சஸ் கொடுக்கலைனாலும் அங்கீகாரத்தைக் கொடுத்துருக்கு. பாசிட்டிவ், நெகட்டிவ்ன்னு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும். நான் வாய்ப்புகளை எதிர்பார்த்துத்தான் இருக்கேன். என்னைத் தேடி இந்தக் கதாபாத்திரம் யுவஶ்ரீக்கு செட்டாகும்னு வருகிற வாய்ப்புக்காகக் காத்துட்டு இருக்கேங்க என்றார்.

Advertisement