பிரியா பவானி சங்கரை தொடர்ந்து சினிமாவில் கால் பதிக்கும் பிரபல சீரியல் நடிகை.!

0
3657
Priya-Bhanishankar
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து பல்வேறு நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். ப்ரியா பவானி ஷங்கர், சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரஷித்தா தொடங்கி சமீபத்தில் ரியோ கூட சினிமாவில் கால் பதித்துவிட்டார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர் சொந்த ஊர் இராமநாதபுரம். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். சன் டிவியில் சுமங்கலி சீரியலிலும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : முன்னணி நடிகருடன் ஹீரோயினாக கமிட்டான ப்ரியா பவானி ஷங்கர்.! ஹீரோ யார் தெரியுமா.? 

- Advertisement -

இவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். அந்தப் படத்தை மதுசூதனன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ். பெரிய திரைக்கு வந்து மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும் திவ்யா கணேஷ், புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதிக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே திவ்யாவின் கனவு.

-விளம்பரம்-
Advertisement