கிரிக்கெட் பாலினால் உதடு கிழிந்து 13 தையல். தீவிர சிகிச்சையில் பிரபல பாலிவுட் நடிகர்..

0
6419
- Advertisement -

டோலிவுட் சினிமா உலகில் கடந்த வருடம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று “ஜெர்ஸி”. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. இவர் கடந்த வருடம் கிரிக்கெட் வீரராக ஜெர்ஸி படத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ஷரத்தா கபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை கௌதம் தின்னனூரி அவர்கள் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அணிருத் அவர்கள் இசையமைத்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் இளைஞன் ஒருவன் கிரிக்கெட் விளையாடுவதை தன் வாழ்க்கை என்று நினைத்து கொண்டு வாழ்கிறான். பின்னர் அவரின் வாழ்க்கையில் திருமணம் நடை பெற்ற உடன் அந்த கிரிக்கெட் விளையாடுவதை கை விடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். மீண்டும் தன் மகனுடைய விருப்பத்திற்காக கிரிக்கெட்டில் கலந்து கொண்டு விளையாடுகிறார். பின் அவர் கிரிக்கெட்டில் சாதிக்கிறாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் அப்பா– மகன் இடையிலான காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைத்து உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தை பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் ரீ-மேக் செய்யலாம் என்று பேச்சு வார்த்தை நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட்டில் இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய அபூர்வமாக அறிவித்து உள்ளார்கள். ஹிந்தியில் இந்த படத்தில் நடிகர் ஷாஹித் கபூர் அவர்கள் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை அல்லு அரவிந்த், அமன் கில் மற்றும் தில் ராஜூ ஆகியோர் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய கௌதம் தின்னனூரி அவர்களே ஹிந்தியிலும் இயக்க இருக்கிறார். நடிகர் ஷாஹித் கபூர் அவர்கள் ஏற்கனவே தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்களின் நடிப்பில் வெளி வந்து பிளாக் பஸ்டர் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி.

இந்த படத்தை ஹிந்தியில் “கபீர் சிங்” என்ற பெயரில் ரீமேக் செய்து இருந்தார்கள். இந்த “கபீர் சிங் படத்தில் நடிகர் ஷாஹித் கபூர் அவர்கள் தான் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெர்சி படத்தின் ரீமேக்கிலும் நடிகர் ஷாஹித் கபூர் அவர்கள் தான் நடித்து வருகிறார். மேலும், இவர் இந்த படத்திற்காக கடும் உடற்பயற்சிகளை மேற்கொண்டும், கிரிக்கெட்டில் பயிற்சிகளை மேற்கொண்டும் வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மோகாலியில் நடை பெற்றது. அப்போது கிரிக்கெட் பந்து நடிகர் ஷாஹித் கபூர் அவர்களின் உதட்டை கிழித்துக் கொண்டு சென்றது. இதனால் இவருக்கு உதட்டில் 13 தையல் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய ரசிகர்கள் எல்லோரும் சமூக வலைத்தளங்களில் இவருடைய நலன் கருதி கேள்வி கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement