சைட் கேரக்டருக்கே ஓப்பனா அப்படி கேக்குறாங்க – ஷாலினி ஸ்டோர்ஸ் புகழ் விஜய் டிவி சீரியல் நடிகை வேதனை.

0
759
- Advertisement -

தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை குறித்து சீரியல் நடிகை அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தொடர் சக்திவேல். இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் ஹீரோவின் தங்கையாக மீனா என்ற ரோலில் நடித்துக் கொண்டிருப்பவர் ரேஷ்மா பிரசாத். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், இவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டு கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட்டார்கள். இதனால் ரேஷ்மா பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில் தான். இவருக்கு சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது.

- Advertisement -

ரேஷ்மா பிரசாத் குறித்த தகவல்:

இருந்தாலும், குடும்ப சூழ்நிலையின் காரணமாக நன்றாக படித்து ஒரு வேலைக்கு சென்றார். ஆனால், தன்னுடைய கனவை கைவிடக்கூடாது என்று தன்னுடைய அம்மாவிடம் அனுமதி வாங்கி சென்னையில் வாய்ப்பு கேட்டு பல இடங்களில் அலைந்தார். வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. அதற்கு பிறகு தான் youtube சேனல்களில் நிறைய ஷார்ட் பிலிம்களில் நடித்தார். இவர் முதல் முத்தம், உத்தம புருஷன், நெஞ்சமே, மனப்பந்தல், கெட்டிமேளம் போன்ற பல ஷார்ட் பிலிம்களில் நடித்திருக்கிறார்.

ரேஷ்மா பிரசாத் நடித்த ஷார்ட் பிலிம்:

அதிலும் கெட்டி மேளம் சீரிஸ் மூலமாக தான் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் அதிகமாக கிடைத்தது. மேலும், பிரியமான தோழி, லாக் டவுன் கல்யாணம், மேரேஜ் தோழி போன்றவற்றில் இவர் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் முத்து உடன் தான் சேர்ந்து நடித்து இருந்தார். அதிலும் இவர் நடித்த நான் பிழை நீ மழலை என்ற ஷார்ட் பிலிம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அதில் இவர் நடித்தார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்லணும்.

-விளம்பரம்-

ரேஷ்மா பிரசாத் சீரியல்கள்:

தற்போது இவர் ஷாலினி ஸ்டோர்ஸ் என்ற சீரிஸில் நடித்து கொண்டு இருக்கிறார். இதன் மூலம் தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன்முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு நல்ல பெயரும் வாங்கி தந்தது. தற்போது இவர் சக்திவேல் தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ரேஷ்மா, நடிக்க வாய்ப்பு கேட்டு போனால் முதலில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி தான் கேட்கிறார்கள்.

ரேஷ்மா பிரசாத் பேட்டி:

ஒரு சின்ன கேரக்டர் ரோலாக இருந்தாலும் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகேவா என்றெல்லாம் கேட்கிறார்கள். எங்கு போனாலும் இதே கேள்விதான். இதனால் ஒரு கட்டத்தில் நான் ஆடிசனுக்கே போகாமல் விட்டுவிட்டேன். அதுமட்டுமில்லாமல் ப்ரோபைலில் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு எஸ், நோ என்று ஆப்ஷனல் எல்லாம் வைத்து அனுப்பி இருக்கிறார்கள். நான் நோ என்று அனுப்பிவிட்டாலுமே அந்த ப்ரோபைலை கூட படித்துப் பார்க்காமல் கால் செய்து அட்ஜஸ்ட்மென்ட் ஓகேவா என்று கேட்கிறார்கள். இந்த அளவிற்கு மோசமான பல சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று வேதனையாக கூறியிருக்கிறார்.

Advertisement