நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தொழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.
சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார்.
இதையும் பாருங்க : காமெடி நடிகர் கிங் காங்கின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா. புகைப்படம் இதோ.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.இத்தனை படங்களில் நடித்தாலும் இவர் பிரபலமானது என்னவோ சமூக வலைதளத்தில் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பருடன் பஜாடா நடனம் என்ற பெயரில் படு கவர்ச்சியாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போது முதல் அம்மணி சமூக வலைதளத்தில் செம பேமஸ்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் படுக்கையறையில் படு கவர்ச்சியான ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.