நான் ஒன்றும் குடித்து விட்டு நடனமாடவில்லை.! அந்த நபர் யார் தெரியுமா.!

0
1855
Shalu
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தொழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு.

-விளம்பரம்-

நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும் அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்க : சிக்ஸ் பேக்கை காட்ட படு மோசமான செல்ஃபீ புகைப்படத்தை வெளியிட்ட கோ பட நடிகை.! 

- Advertisement -

சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல் ‘ படத்திலும் நயன்தாராவின் தோழியாக நடித்துள்ளார் ஷாலு ஷம்மு. இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர், ஆண் நபருடன் ,மிக நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

View this post on Instagram

Bachata Sensual Dance Video

A post shared by Shalu Shamu (@shalushamu) on

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர, ஷாலு ஷம்மு குடித்து விட்டு நடன மாடியுள்ளார் என்று கிளப்பி விட்டனர். இதற்கு பதிலளித்துள்ள ஷாலு ஷம்மு, ‘நான் ஒன்றும் அங்கு குடித்து விட்டு நடனமாடவில்லை, அங்கு இருந்தவர்கள் அனைவருமே டான்ஸர்கள்.என்னுடன் ஆடியவரும் டான்ஸர் தான், என் பாய் ப்ரண்ட் இல்லை’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் மீடூ குறித்து கேட்ட போது’ நானும் மீடூ பிரச்னையை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் இது குறித்து புகார் தெரிவிக்க எனக்கு விருப்பமில்லை. காரணம் இந்த மாதிரியான பிரச்னைகளை எப்படி கையாள்வது என எனக்குத் தெரியும். அப்படியே செய்தாலும் என்ன நடக்கப் போகிறது. எதிரில் இருப்பவர் அதை ஒத்துக் கொள்வார் என நீங்கள் நினைக்கிறீர்களா? ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement