தல 60 படத்தில் கார் ரேஸராக நடிக்க போகிறாரா அஜித்.! போனி கபூர் சொன்ன சூப்பர் தகவல்.!

0
1089
Ajith 60
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும், இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது நாம் பலரும் அறிந்த ஒரு விடயம் தான்.

-விளம்பரம்-
Ajith

இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 60 வது படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்று ஏற்கனவே அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்த நிலையில் தல 60 குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் போனி கபூர்.

இதையும் படியுங்க : சிக்ஸ் பேக்கை காட்ட படு மோசமான செல்ஃபீ புகைப்படத்தை வெளியிட்ட கோ பட நடிகை.! 

- Advertisement -

இது குறித்து பேசிய அவர், தமிழ் படம் நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கின் போது அஜித் பற்றி தெரிந்துக் கொண்டேன். அவருக்கு ரேஸிங் மற்றும் விளையாட்டுகளில் உள்ள ஆர்வம் பற்றி தெரிந்து ஆச்சர்யத்தில் வியந்தேன்.  எதிர்பாராத விதமாக த்ரில்லர் படமான தல 60 படத்தில் ஸ்பீடுக்காக அவரது ரேஸிங் ஆர்வத்தை பயன்படுத்துகிறோம். அவரை ஒரு பக்கா ஆக்ஷன் படத்தில் நடிக்க வைக்க ஆசை என்று கூறியுள்ளார்.

Image result for ajith boney kapoor

ஹிந்தியில் ஒரு பக்கா ஆக்ஷன் படத்தில் அவரை நடிக்க வைக்க ஆசை’ என கூறியுள்ளார். எனவே, இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு கார் ரேஸராகவோ, பைக் ரேஸராகவோ நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. பொதுவாக அஜித்திற்கு கார் மற்றும் பைக் என்றால் அவ்வளவு பிரியம். அவரது வீடு முழுக்க ரேஸ் பைக்குகள் தான் குவிந்து கிடக்கிறது.

-விளம்பரம்-

அஜித் நடித்த காதல் மன்னன் படம் துவங்கி இறுதியாக வெளியான விஸ்வாசம் படம் வரை அஜித் படங்களில் பைக் மற்றும் கார் தொடர்பான காட்சிகள் இடம் பெறாமல் இருந்ததே இல்லை. அதுமட்டுமல்லாமல் அஜித் நிஜத்தில் ஒரு பார்முலா ஒன் கார் ரேசர் என்பதால் ‘தல60’ படத்தில் அஜித்தை பார்முலா ஒன் ரேஸராக பார்த்தாலும் ஆச்சார்யபடுவதற்கு இல்லை. அது மட்டும் நடந்தால் அஜித் ரசிங்கர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடும்.

Advertisement