44 வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி. மகளின் பெயர் என்ன தெரியுமா ?

0
18054
shipa-Shetty
- Advertisement -

பொதுவாக மற்ற சினிமா துறைகளை விட பாலிவுட் நடிகர் நடிகைகள் தங்களது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.குறிப்பாக தங்களது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்வார்கள். ஆனால், திருமணத்திற்கு பின்னர் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகள் மிகவும் குறைவு தான் அந்த வரிசையில் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக நடித்து வரும் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியும் ஒருவர்.

-விளம்பரம்-

இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்த இவர், இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், தமிழில் பிரபு தேவா நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மோதி விளையாடு படத்திலும் நடித்திருந்தார். இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போதும் இந்தி சினிமாவில் இளம் நடிகைகளுக்கு இணையாக தனது உடலை பராமரித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அலட்சியமாகவும், கவனக்குறைவாக இருந்தவர் மீது வழக்கு – வாக்குமூலம் அளித்த இணை இயக்குனர்.

நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2009-ஆம் ஆண்டு, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு வியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ராவுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ராஜ் குந்த்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரான சமீஷா ஷெட்டி குந்த்ராவை அறிவிப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதை வெளிப்படுத்த இயலவில்லை. பெண் குழந்தை பிறந்துள்ளார். நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Image result for shilpa shetty Husband

தனது இரண்டாவது மகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளஷில்பா ஷெட்டி , எங்கள் பிரார்த்தனைகளுக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. மனதார நன்றி தெரிவிப்பதுடன், எங்கள் குட்டி தேவதை சமீஷா ஷெட்டி குந்த்ராவின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், சமீஷா என்ற பெயருக்கு விளக்கமும் அளித்துள்ளார். அதாவது, ‘sa’ என்றால் வேண்டும் எனவும் Misha என்றால் ரஷ்ய மொழியில் கடவுளைப் போன்ற ஒருவர் என்பதை குறிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Advertisement