கிராமத்து பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்க நடிகர் சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி..!

0
250
Shivakarthikeyan

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்திகேயனைன் வளர்ச்சி மிகவும் பாராட்டக்கூடிய விடயம் என்று அனைவரும் அறிவோம். சாதாரண மேடை கலைஞராக தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் தனது முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இதுநாள் வரை நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார். இந்த படத்தை பாடகரும் சிவகார்திகேயனின் நெருங்கிய நண்பருமான அருண் ராஜா சிவகார்திகேயனின் இயக்கியுள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி முதன் முறையாக வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளில் கனா டீம் பேட்டி கொடுத்ததும் வருகிறது.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பங்குபெற்ற போது தமிழகத்தை சேர்ந்த பெண் கிரிக்கெட் அணி ஒன்று மேடைக்கு வந்தது. அப்போது அந்த பெண் வீராங்கனைகள், கிரிக்கெட் தான் எங்களுடைய மூச்சு, வெறி எல்லாம் ஆனால் சரியான கிரிக்கெட் உபகரணம் இருந்தால் நாங்களும் இந்திய அளவில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக வருவோம் என்று தெரிவித்தனர்.

இதனை கேட்ட சிவகார்த்திகேயன் அந்த அணிக்கு என்ன உபகரணம் வேண்டுமே அது கனா டீம் ஏற்கும் என்று மேடையிலேயே தெரிவித்தார். வெறும் படத்தில் மட்டும் பெண்கள் கிரிக்கெட்டை பற்றி பேசாமல் நடிகர்சிவகார்த்திகேயன் நிஜத்திலும் பெண்கள் கிரிக்கெட்டிற்காக செய்துள்ள இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Read more at: https://tamil.behindtalkies.com/shivakarthikeyan-reply-to-hisbeloved-fan/

Read more at: https://tamil.behindtalkies.com/shivakarthikeyan-reply-to-hisbeloved-fan/