நான் இதுவரை அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்ததில்லை ! சிவா உருக்கம்

0
3400
Actor sivakarthikeyan

தனது கடின உழைப்பால் இன்று சினிமாவில் தனக்கென்று ஒரு நல்ல இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் .முதலில் காமெடியனாக தனது பயணத்தை தொலைக்காட்சியில் தொடங்கிய இவர் பின்னர் சினிமாவில் காமெடியனாகி தற்போது ஒரு மாஸான ஹீரோவாக தன்னை நிலை நிறுதியுள்ளார்

ஆனால் இவரது தந்தை திரு .தாஸ் ஒரு காவல் அதிகாரி, கார்த்திகேயன் சினிமாவிற்கு வரும் முன்பே அவர் இறந்துவிட்டார் .சிவ கார்த்திகேயன் பல மேடைகளில் தனது தந்தையை தாம் மிகவும் மிஸ் செய்வதாகவும், சிறந்த என்டேர்டைனர்க்கான விருதை விஜய் அவார்ட்ஸ் 2014லில் பெற்றபோது கூட தனது தந்தைக்கு தான் கொல்லிவைத்தது தவற வேறு எதுவும் செய்ததில்லை என்று கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதுவரை தனது தந்தையுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லையாம் சிவகார்த்திகேயன்.ஆனால் அந்த ஆசை தற்போது ரசிகர் ஒருவரால் நிறைவேறியுள்ளது.ட்விட்டரில் ரசிகர் ஒருவர் சிவகத்திகேயன் தான் விருது வாங்கிய மேடையில் தனது தந்தையுடன் இருப்பது போன்று ஒரு அழகான ஓவியத்தை வரைந்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த சிவகார்த்திகேயன் மிகவும் நெகிழ்ந்து அந்த ரசிகரிடம் இப்படி ஒரு புகைப்படத்தை அளித்ததற்கு மிகவும் நன்றி எனக்கு என்ன சொல்ல கூறுவதென்றே தெரிவில்லை என்று மிகவும் உணர்ச்சிகரமாக ரீட்வீட் செய்துள்ளார்.இந்த பதிவை பார்த்த எல்லாரும் அந்த ரசிகரை பாராட்டிவருகின்றனர்