விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. தற்போது நடிகை ஓவியா ’90ML’ என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதமே வெளியாகியிருந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘குளிர் 100′ என்ற படத்தை இயக்கிய அனிதா உதீப் ஓவியா நடிக்கும் ’90ML’ இயக்குகிறார். Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு நடிகர் சிம்பு தான் இசையமைக்கவுள்ளார். அதோடு இந்த படத்தில் ஒரு கௌவரவ தோற்றத்திலும் நடிக்க போகிறாராம் நடிகர் சிம்பு.
ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரது வெளிப்படையான நடவடிக்கை பார்த்து சிம்பு ஒரு முறை ஓவியாவை திருமணம் செய்துகொள்ள நான் ரெடி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதே போல இந்தாண்டு நடிகர் சிம்பு இசையமைத்த ‘மரண மட்டை’ பாடலை நடிகை ஓவியாவை பாட வைத்து அந்த பாடலை வெளியிட்டார் சிம்பு.
அந்த பாடல் வெளியான பின்னர் நடிகர் சிம்புவும், ஓவியாவும் காதலிக்கின்றனர் என்ற வதந்திகள் கூட வந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஆராவுடன், நடிகை ஓவியா ஊர்சூற்றிய வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது.இருப்பினும் நடிகை ஓவியாவுடம் நெருக்கமாக இருந்து வரும் சிம்பு, ஓவியாவிற்காக தான் ’90ML’ படத்தில் கௌவரவ தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கிசுகிசுக்கபடுகிறது.