மறைந்த பாடகி பவதாரணி கடைசியாக பாடலை பதிவிட்டு சிம்பு சொல்லி இருக்கும் இரங்கல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் இளையராஜா மகளின் இறப்பு செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இளையராஜா அவர்கள் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்களும் தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான்.
மேலும், இளையராஜாவின் மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின் இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவதாரணி. இந்த பாடலுக்காக இவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி இருந்தார். பின் இவர் தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடியிருந்தாலும் அவர் குறிப்பாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் படங்களில் தான் அதிகம் பாடியிருக்கிறார்.
பவதாரணி உடல்நிலை:
இவர் பாடுவது மட்டும் இல்லாமல் பல படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது. இதற்காக இவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருக்கிறார்.
பவதாரணி இறப்பு:
அதேபோல் இளையராஜாவும் இலங்கையில்தான் இருந்திருக்கிறார். இவர் 28ஆம் தேதி வரை இருக்கும் மியூசிக் கான்செர்ட் நடைபெறுவதால் இவர் தன்னுடைய மகளை கவனித்துக் கொண்டு தன்னுடைய இசை வேலையும் செய்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்திருக்கிறார். தற்போது அவருக்கு வயது 47. இன்று மாலை அவருடைய உடல் சென்னைக்கு வருகிறது.
சிம்பு பதிவு:
இவருடைய இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பவதாரணி மறைவு குறித்து நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய இரங்கலை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், தான் நடித்த மாநாடு படத்தில் இடம் பெற்ற “மெஹெரெசிலா” பாடலை பதிவிட்டு, அப்பாவி தனத்திற்காகவும் அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் குரல் நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள் சீக்கிரம் சென்று விட்டார்.
The voice that forever lives in the heart of people for its innocence and love! You were a pure soul! Gone too soon! I pray to God to give strength to the family of Illayaraja sir and my brother @thisisysr at this moment! Rest in peace Bhavatharini. 💔#Bhavatharini #RIP pic.twitter.com/PO3ArYGq49
— Silambarasan TR (@SilambarasanTR_) January 25, 2024
சிம்பு இரங்கல்:
இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் யுவன் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இக்கணத்தில் நிம்மதியாக இருங்கள் பவதாரணி என்று பதிவிட்டிருக்கிறார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருந்த மாநாடு படத்தில் இடம்பெற்ற “மெஹெரெசிலா” என்ற பாடலை பவதாரணி பாடியிருந்தார். இந்த பாடலில் இவருடைய குரல் சில நிமிடங்கள் தான் வரும் இருந்தாலும் இந்த குரல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.