என் அடுத்த படத்தின் ஹீரோயின் இந்த போட்டியாளர்த்தான்.! சென்ராயனிடம் சொல்லி அனுப்பிய சிம்பு

0
670
Sendrayan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்பது வரும் ஞாயிற்றுகிழமை தெரிந்து விடும். இறுதி வாரம் என்பதால் டாஸ்க் எதுவும் இல்லாமல் மிகவும் போராகவேய சென்றுகொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

aishwarya-dutta

- Advertisement -

கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் மஹத் மற்றும் சென்ராயன் வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த சென்ராயன் மிகவும் பரவசமாக சுற்றிக்கொண்டிருந்தார்.

மேலும், உங்கள் அணைவருக்கும் வெளியில் நல்ல பெயர் இருக்கிறது என்று போட்டியாளர்களிடம் கூறிய சென்ராயன், ரித்விகாவிடம், உன்னை பற்றி சிம்பு என்னிடம் விசாரித்தார் என்றதும் ரித்விகா மிகவும் சந்தோசப்பட்டார். மேலும், ஐஸ்வரியிடம் பேசுகையில், உனக்கு வெளியே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர், சிம்புவின் அடுத்த படத்திற்கு நீதான் ஹீரோயின் என்று சிம்புவே கூறியுள்ளார் என்று சென்ராயன் சொன்னதும் ஐஸ்வர்யாவிற்கு தலை கால் புரியவில்லை.

-விளம்பரம்-

Aishwarya-bigg-boss

ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்ற யாஷிகாவிற்கும் சரி, தற்போது உள்ளே இருக்கும் ஜனனி, ரித்விகா ஆகியோருக்கு பட வாய்ப்புகள் தயாராக இருக்கிறது. இந்நிலையில் சென்ராயன் கூறியதை வைத்து பார்க்கும் போது பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யா சிம்புவின் அடுத்த படத்தில் நடித்தாலும் ஆச்சர்யமில்லை.

Advertisement