Breaking News : பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார் – என்ன காரணம் ?

0
1120
manikka vinayagam
- Advertisement -

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் சற்று முன்னர் காலமாகி இருக்கிறார். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மட்டும் எண்ணெற்ற நடிகர் நடிகைகள் காலமாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விவேக், கில்லி மாறன், நெல்லை சிவா, நெடு முடி வேனு, அனந்த கண்ணன், நடிகர் பாண்டு,என்னடி முனியம்மா பாடல் புகழ் Tks நடராஜன் என்று பல தமிழ் சினிமா பிரபலங்கள் காலமான சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமாகி இருக்கிறார். தமிழில் கடந்த 2001- ஆம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் மாணிக்க விநாயகம். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் பாடும் வாய்ப்பு வந்தது.

- Advertisement -

மாணிக்க விநாயகம் நடித்த படங்கள் :

தில் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஜெயம், இயற்கை, அருள், சந்திரமுகி, திருப்பாச்சி பருத்திவீரன், சிங்கம், சேவல், மஜா, ஓரம் போ போன்ற பல்வேறு படங்களில் பாடியிருக்கிறார். இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.

Manikka Vinayagam Photo Gallery

15,000 மேற்பட்ட பாடல்கள் :

திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார். பின்னணி பாடகராக மட்டுமல்லாமல் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2003ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருடா திருடி’ படத்தில் தனுஷின் தந்தையாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

நடிகராகவும் கவர்ந்த மாணிக்கம் :

ஒரு பாடகராக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவர் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின்னர் பேரழகன், திமிரு, வேட்டைக்காரன், யுத்தம் செய் போன்ற பல படங்களில் நடித்த இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்.

Download Manikka Vinayagam MP3 Songs on JOOX APP | Download Manikka  Vinayagam Free Songs Offline on JOOX

மாரடைப்பால் மரணம் :

கடந்த சில ஆண்டுக்ளாக இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 6.45 மணி அளவில் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதியாக இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘எண்பத்தி எட்டு’ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement