சினிமா வாய்ப்பிற்காக 14 வயதில் ஊசி போட்டேன், ஆனால் அதனுடைய விளைவு – பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.

0
1144
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஹீரோ அம்மாவின் தோழியாக நடிப்பவர் தான் பாக்யஸ்ரீ . இவர் தமிழில் தேவியின் திருவிளையாடல் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் என்பது காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் இவருக்கு திருமணம் ஆனதால் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பாக்கியஸ்ரீ பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், கவலைகள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். அதை மறந்துதான் சந்தோஷமாக இருக்கணும்.

- Advertisement -

நடிகை பாக்கியஸ்ரீ பேட்டி:

அப்படி இருந்தால் இளமையாக இருக்கலாம். ஒரு நடிகைக்கு இது தான் ரொம்ப முக்கியம். நான் 1982ல் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினேன். சின்ன வயதில் இருந்தே நடிகை ஸ்ரீதேவியை பார்த்து தான் நடிக்கணும் என்ற ஆசை எனக்கு வந்தது. அப்போது எல்லாம் சென்னையில் தான் தமிழ், மலையாளம், தெலுங்கு பட சூட்டிங் எல்லாம் நடக்கும். அப்படிதான் என் உறவினர் மூலம் மலையாள படத்தில் அறிமுகமானேன். தேவியின் திருவிளையாடல் என்ற படத்தில் தான் நடித்தேன்.

14 வயதில் சினிமா :

அந்த படம் தமிழிலும் வெளியாகி இருந்தது. மனோரமா, கே ஆர் விஜயா ஆகியோரெல்லாம் நடித்திருந்தார்கள். தாவணி கூட எனக்கு ஒழுங்கா கட்ட தெரியாது. மனோரமா தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். 14 வயதில் சினிமாவில் வந்தேன். என்னுடைய உடம்பை கொஞ்சம் உண்டாக்குவதற்காக ஊசி எல்லாம் போட்டேன். காரணம் அப்போதெல்லாம் நடிகைகள் கொஞ்சம் உண்டாகத் தான் இருப்பார்கள். அப்படி இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும். அதற்காகத்தான் நான் ஊசியை போட்டு என்னுடைய உடல் எடையை அதிகரித்தேன்.

-விளம்பரம்-

ஊசி போட்ட விளைவு

அதற்குப் பிறகு நான் சில படங்களில் நடித்தேன். அதற்குள் குடும்ப வாழ்க்கைக்கு வந்து விட்டேன். அப்போது நடிக்க ஊசி போட்ட விளைவு என்னுடைய கர்ப்ப காலத்தில் தெரிந்தது. ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்பதற்காக நான் ஊசி போட்டு குண்டானேன். இந்த மாதிரி ஊசி போட்டது என்னுடைய அம்மாவுக்கு தெரியும். ஆனால், அப்பாவுக்கு தெரியாது. நான் நடிக்க கூடாது என்பதில் எங்க அப்பா ரொம்ப தெளிவாக இருந்தார். காரணம், நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள். நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது.

திருமண வாழ்க்கை :

என்னுடைய விருப்பத்தில் நான் வந்தேன். காலையில் மலையாளம், மதியம் தமிழ், மாலை தெலுங்கு போன்ற மூன்று மொழிகளிலும் நடித்தேன். அந்த அளவிற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. மொத்த ஷூட்டிங்கும் சென்னையில் நடந்தால் தான் இதை என்னால் சமாளிக்க முடிந்தது. எனக்கு திருமண ஆனது. சில ஆண்டுகள் கழித்து தான் ஏன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டேன் என்று வருத்தப்பட்டேன். திரும்பிப் பார்த்தால் நாட்கள் சென்றது. மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். ரஜினி சார் என்றும் சூப்பர் ஸ்டார். அவருடன் நான் நடித்திருக்கிறேன் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்

Advertisement