விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து தன்னுடைய குடும்பத்திற்காக செய்த உதவிக்கு மீனா நன்றி சொன்னார். இன்னொரு பக்கம் ரோகினி சாப்பிடாமல் ரொம்பவே கவலையில் இருப்பதால் அவருடைய அம்மா வித்யாவை வீட்டிற்கு வர வைத்தார். ரோகினி, மனோஜ் அவருடைய அம்மா பேச்சை மட்டும் கேட்பதாக சொல்லி புலம்பினார். வித்யா, இதற்கு ஒரே முடிவு நீ மனோஜை விவாகரத்து செய்துவிடு. உன்னுடைய மகனுடன் சந்தோஷமாக வாழு என்றார். ரோகிணி, அதெல்லாம் முடியாது. நான் மனோஜுடன் தான் சேர்ந்து வாழ்வேன். என்ன நடந்தாலும் எனக்கு மனோஜ் வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

முத்துவிடம் வேலை செய்யும் டிரைவர்கள் எல்லோருமே தங்கள் சம்பாதித்த பணத்தை கொடுத்து மாலையெல்லாம் போட்டு பாராட்டினார்கள். முத்துவை எல்லா டிரைவர்களும் புகழ்ந்து பேசுவதை பார்த்து அண்ணாமலை ரொம்பவே சந்தோஷப்பட்டார். ஆனால், மனோஜ் விஜயா இருவரும் வயிறு எரிந்தார்கள். பின் விஜயா, மனோஜிடம் நீ இவனை விட அதிகமாக சம்பாதிக்கணும். நீ நிறைய படித்திருக்கிறாய் நன்றாக யோசி. அவர்கள் முன்பு நீ நன்றாக வாழ்ந்து காட்டணும் என்றார். அதற்குப்பின் பார்வதி யூடியூபில் நிறைய சம்பாதிப்பதை கவனித்த விஜயா, தானும் புதிதாக youtube சேனல் ஓபன் செய்வதாக வீட்டில் எல்லோரிடமும் சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
சுருதி எப்படி எல்லாம் யூடியூப் சேனல் தொடங்கனும் என்றெல்லாம் ஐடியா கொடுத்தார். பின் விஜயா, தன்னுடைய நடன வீடியோக்களை போட்டு சேனல் தொடங்குவதாக சொல்கிறார். அதற்குப்பின் மனோஜ் கடையின் வியாபாரம் ரொம்பவே மோசமாக போகிறது. டீலர்கள் எல்லாம் பணத்தை கொடுத்து பொருளை வாங்க சொல்வதால் என்ன செய்வது என்று புரியாமல் மனோஜ் தவித்தார். விஜயாவும் உன்னுடைய மூளையை யூஸ் பண்ணி ஏதாவது செய் என்றார். அதற்குப் பின் கடைக்கு வந்த மனோஜ், ரோகினிக்கு கோர்ட்டில் சொன்னபடி பணம் கொடுப்பதற்கு ஜீவாவை போன் செய்ய சொன்னார். ரோகினி, நான் வெளியில் இருக்கிறேன். மனோஜை வீட்டில் வந்து பணத்தை கொடுக்க சொல் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், ரோகினியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். மனோஜை பார்த்தவுடன் ரோகினி ரொம்பவே சந்தோஷப்பட்டு நலம் விசாரித்து அவருக்கு சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து தருகிறார். மனோஜும் எதுவும் பேசாமல் சாப்பிடுகிறார். அப்போது ரோகிணி, நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன். என்னையும் புரிந்து கொள். நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்கிறார். மனோஜ், அதெல்லாம் நடக்காது. நான் உன்னுடைய பணத்தை 5 லட்சத்தை திருப்பி தந்து விடுகிறேன். நீ எனக்கு விவாகரத்து நோட்டீஸ் கையெழுத்து போட வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். கடைசியில் ரோகினி, நீ பணத்தை கொண்டு வா நான் நோட்டீசில் கையெழுத்து போட்டு விடுகிறேன்.

சீரியல் ட்ராக்:
ஒருவேளை நீ உன்னுடன் சேர்ந்து வாழ நினைத்தால் என்னுடைய வீட்டிற்கு வந்துவிடு என்றெல்லாம் சொல்கிறார். மனோஜ் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் நீத்து, சுருதி திருமணம் செய்து கொள்ள நினைத்த நபருடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீத்து, சுருதியை பழிவாங்க வேண்டும். எனக்கு ரவி கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய செய்யணும் என்றெல்லாம் கேட்கிறார். அந்த நபருமே கண்டிப்பாக நான் சுருதியை சும்மா விடமாட்டேன். நீ ரவியை கல்யாணம் செய்து கொள். சுருதியை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் வில்லத்தனமாக திட்டம் போடுகிறார்கள்.






