உள்ள நடக்குறது பாத்தா அப்படி தெரியலையே..! மஹத்தை கிண்டல் செய்த காமெடி நடிகர்.!

0
733

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஆரம்பித்த நாளில் இருந்தே நடிகர் மஹத்தை பலரும் கலாய்த்து வருகின்றனர். அவர் பெண்களிடம் செய்யும் பல செயல்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் மஹத் மிகவும் உருக்கமுடன் கூறிய விடயத்தை காமெடி நடிகர் சதீஷ் கலாய்த்துள்ளார்.

mahat

- Advertisement -

நேற்று (ஜூலை 6) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்புடன் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தாங்கள் மிஸ் செய்யும் தங்கள் அன்புக்கிறியவர்களை பற்றி கூறி ஒரு குறுந்தகவலை எழுதி அனுப்பலாம் என்று பிக் பாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த டாஸ்கின் போது நடிகர் மஹத் “தன்னுடைய காதலி பிராச்சியை மிகவும் மிஸ் செய்வதாக கூறி இருந்தார்”. தற்போது நடிகர் மஹத் கூறியதை கிண்டல் செய்யும் வகையில் காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “காதலியை மிஸ் பண்ரீங்களா , உள்ள நடகற்த்தெல்லாம் பாத்தா அப்படி தெரியலே ராஜா” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதிலிருந்தே பெண்களிடம் மிக நெருக்கமாக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக யாசிக்கவிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நடிகர் மஹத், அவரை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று பல அநாகரீக செயல்களை செய்து வருகிறார். அதனால் தான் நடிகர் சதீஸ் இப்படி அவரை களாய்துள்ளார்.

Advertisement