விஜய்க்கு போன் செய்து மாஸ் ஹிட்டான படத்துக்கு டிக்கெட் கேட்ட பிரபலம்.! யார் ..? எந்த படம் தெரியுமா.?

0
544
Actor-vijay

இளையதளபதி விஜய் பத்ரி படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. விஜய்யின் சினிமா வாழ்கையில் இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட்டை நடிகர் விஜய்யிடமே போன் செய்து கேட்டுள்ளார் இயக்குனர் திரு.

thiru

தமிழில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் திரு. இவர் இயக்கிய “தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன்” போன்ற படங்ககள் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ள “மிஸ்டர் சந்திரமௌலி ” படமும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற இயக்குனர் திரு, ‘பத்ரி’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினார்” விஜய் சாரை எனக்கும் மிகவும் பிடிக்கும். நான் பத்ரி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய போது விஜய் சார் என்னை அவரது காரில் என்னை கூட்டி செல்வார்.

badri

பின்னர்,’பத்ரி’ படம் வெளியான போது நான் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றேன். அப்போது எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. உடனே விஜய் சாருக்கு போன் செய்து டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினேன். அந்த அளவிற்கு விஜய் சார் எனக்கு நெருக்கமாக இருந்தார். காலப்போக்கில் எங்கள் நெருக்கும் குறைந்து விட்டது.ஆனால், விரைவில் அவரை நேரில் சென்று சந்திப்பேன். ” என்று தெரிவித்துள்ளார்.