தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டாக்டர்.
இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு,இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சிவா நடிக்கும் படம்:
இந்நிலையில் சிவா நடிக்கும் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகி உள்ளது. உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த படம் உருவான விதம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படத்தில் ஹீரோவாக யாரு போடலாம் என்று பெரிய டிஸ்கஷன் நடந்தது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அளித்த பேட்டி:
நான் சிவகார்த்திகேயனிடம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. பின் கமல் சாரிடம் சிவா பெயரை சொன்னதும் அவர் ஏன் இப்படி தயங்கி சொல்றீங்க. ரொம்ப பர்ஃபெக்ட்டான சாய்ஸ். அவர் ரொம்ப ஷார்ப். யார் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் சரியான நபரை பிடித்து விட்டீர்கள். நான் அவரை சந்திக்கிறேன் என்று சொன்னார். கமல் சார் இப்படி சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.
சிவா-கமல் கூட்டணி உருவான விதம்:
பின் சிவாவே கமல் சாரை பார்த்து பேசினார். பின் சோனி நிறுவனத்திடம் இதைப் பற்றி சொன்னதும் அவர்களும் ஹாப்பி ஆகிவிட்டார்கள். இப்படி தான் இந்த படம் ஆரம்பமானது. கூடிய விரைவில் இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கி படப்பிடிப்புகள் நடைபெறும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறி இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற ஹீரோக்களை வைத்து எப்போதாவது தான் படங்களை தயாரிப்பார்.
கமல் தயாரிப்பில் வெளிவந்த படம்:
இதற்கு முன்பு 1987இல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் சத்யராஜ், 2003இல் நள தமயந்தி என்ற படத்தில் மாதவன், 2019ல் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் போன்றவர்கள் கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் நடித்துள்ளனர். இப்போது இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார். இதனால் தமிழ் திரையுலகில் பலரும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து இருந்தார்கள். அதேபோல் கமல் நடித்து இருக்கும் விக்ரம் படத்தின் ரிலீசுக்காக அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.