எல்லோரையும் கலாய்க்கும் சிவகார்த்திகேயனை மோசமாக கலாய்த்த ஆட்டோ டிரைவர் !

0
1298

தனது ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கலாய்த்துள்ள சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan

சிவாகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் ஆவார். தற்போது அவர் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ஆரம்பத்தில் அவர் ஒரு கத்துக்குட்டி தான்.தான் மெரினா படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கலாய்த்தார் என சிவாகார்த்திகேயன் கூறியள்ளார்.

சிவாகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் ‘மெரினா’ இந்த படம் முழுக்க மெரீனாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் காட்சிகள் மெரினாவில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது, அதை பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர், அதில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மட்டும் சிவாவை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாராம்.

Marina Movie Stills

அப்போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் அவருடைய நண்பருக்கு போன் செய்து , இங்கே நடிகர் ஜீவா ஷூட்டிங் நடக்கிறது சீக்கிரம் வா என்று அழைத்திருக்கிறார். இதை கவனித்த சிவகார்த்திகேயன், அவரிடம் ஐயா, நான் ஜீவா இல்லை என்று கூறியுள்ளார்.

அதை சற்றும் எதிர்ப்பார்க்காது அந்த ஆட்டோ ஓட்டுநர், அப்போ இவ்ளோ நேரம் நான் உன்னையா பாத்துட்டு இருந்தேன்,என்று சிவகார்த்திகேயனை கிண்டல் செய்யும் வகையில் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகியுள்ளார். இதனை ஒரு நிகழ்ச்சியில் கூறி சிரித்தார் சிவாகார்த்திகேயன்.