முதல் முறையாக சிவகார்த்திகேயனின் மகள் சினிமா துறையில், ஆனால் நடிகையாக அல்ல !

0
259

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களின் குழந்தைகைகள் சினிமாவில் கால் பதித்து வருகின்றனர். விஜய் மற்றும் ஜெயம் ரவி போன்றவர்களின் குழந்தைகள் சினிமாவில் முகம் காண்பித்துவிட்ட நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் சினிமாவில் கால் பதித்துள்ளார், அதுவும் பாடகியாக

sk dr1

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் பாராட்டக்கூடியது. வேலைக்காரன் படத்திற்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது “கனா” என்ற படத்தை தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக அவருடைய முதல் படம் இதுவாகும். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் போன்ற நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை நடிகரும், பாடகருமான அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்திற்கு திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

sk

இந்த படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனா பாடியுள்ளார். அவருடன் சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கோம் விஜயலட்சுமி ஆகியோரும் இணைத்து பாடியுள்ளனர். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு குட்டி பாடகியாக அறிமுகமாகவுள்ளார் ஆராதனா. மேலும், இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது.