விஜய் டிவி நல்லா போய்ட்டு இருக்கு.! உனக்கு எதுக்கு இந்த வேலை ! ஹீரோ ரொம்ப கஷ்டம்.!சிவா உருக்கம்..!

0
8407

நடிகர் சிவகார்த்திகேயன், தொகுப்பாளராக தனது பயணத்த தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள “ஒரு குப்பை கதை ” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பங்குபெற்ற சிவா, தான் ஹீரோ எல்லாம் கிடையாது என்று கூறியுள்ளார்.

இன்று (மே 16) சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளிட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் “இந்த விழாவிற்கு நான் வருவதற்கு முக்கிய காரணமே இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடன இயக்குனர் தினேஷிற்காக தான், அவரை எனக்கு அந்த அளவிற்கு பிடிக்கும். அவர் நான் நடித்த” எதிர் நீச்சல்” படத்தில் எனக்கு நடன குருவாக இருந்திருக்கிறார் ” என்று கூறியுள்ளார்.

இது பற்றி மேலும் பேசிய சிவா
]கார்த்திகேயன் “எல்லோருக்கும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் எண்ணம் கண்டிப்பாக இருந்தது. நானும் அப்படித்தான் விஜய் டிவியில் இருக்கும் போது சினிமாவில் நடிக்க போகிறேன் என்று கூறினேன், அதற்கு பலரும் உனக்கு எதற்கு இந்த வேலை சினிமாவில் ஹீரோ ஆவது என்பதெல்லாம் மிக கடினம் என்று கூறினார்கள்.

ஆனால், அதற்கு நான் ஹீரோவெல்லம் கிடையது, சினிமாவில் ரஜினி, கமல் , அஜித், விஜய் ஆகிய இவர்கள் தான் ஹீரோ, நான் வெறும் ஒரு முன்னனி நடிகர் தான்” என்று கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இதனை கேட்ட மேடையில் இருந்த அனைவரும் சில நொடிகள் கை தட்டி நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டினர்.