தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார்.
பிரபலங்களை கவர்ந்த அரபிக் குத்து :
விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.
விஜய் என்ன சொன்னார் :
இந்த பாடல் வெளியானதில் இருந்தே தொடர்ந்து பல சாதனைகளை செய்து வந்தது. இது யூட்யூபில் 12 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி வருகின்றனர். அதுவும் இந்த பாடல் இந்த அளவிற்கு ஹிட்டான ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இப்படி ஒரு நிலையில் இந்த பாடலை எழுதிய சிவர்கார்த்திகேயனை விஜய் பாராட்டியாக சிவகார்த்திகேயன் விருது விழா ஒன்றில் கூறியுள்ளார்.
Sk சொன்ன சுவாரசிய தகவல் :
அரபிக்குத்து’ பாடல் ரொம்ப முன்னாடியே படமாக்கி முடித்துவிட்டார்கள். அப்போது விஜய் சார் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. எனக்கு போன் எதுவும் வரவில்லை. இவன் என்ன எழுதியிருக்கான் என்றே தெரியவில்லையே என்று நினைத்திருக்கலாம். என்று வேடிக்கையாக சொன்ன Sk, சமீபத்தில் தான் ப்ரோமோ வீடியோ ஷுட் செய்தோம். அப்போது தான் விஜய் சார் தொலைபேசியில் “சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே என்று கூறினார்.
அனிரூத்திடம் விஜய் சொன்ன விஷயம் :
உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லையே சார். அனிருத் பாதி பாடிவிடுவார், நாம் சும்மா விட்ட இடத்தை நிரப்ப வேண்டியது தான் என்று விஜய் சாரிடம் கூறினேன். விஜய் சாருக்கு ‘அரபிக்குத்து’ பாடல் ரொம்பவே பிடித்துள்ளது. அவர் இந்த பாடலை முதல் முறை கேட்ட உடனேயே இது பெரிய ஹிட் என்று அனிருத்திடம் விஜய் சார் சொல்லி இருக்கார் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.