படத்தின் வெற்றி இந்த 20 நிமிடத்தில் தான் இருக்கிறது..! ரசிகர்களை ஈர்க்க படக்குழு செய்த பிளான்..!

0
266
Seemaraja

நடிகர் சிவகார்த்திகேயன் “வேலைக்காரன் ” படத்திற்கு பிறகு படு பிஸியான நடிகராக மாறிவிட்டார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

seemaraja

சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து “சீமாராஜா” படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பொன்ராம். படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதன் முறையாக நடிகை சமந்தா நடித்துளளார். படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்றும் வெளியாகி இருந்தது.

அந்த ட்ரைலரில் இறுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் “பாகுபலி” கெட்டப்பில் வருவது போல ஒரு காட்சியும் இடம் பெற்றிருந்தது. அந்த கட்சியை பலரும் கலாய்த்து வந்தனர். ஆனால், உண்மையில் “சீமராஜா” படத்தில் இரண்டாம் பாதியில் பாகுபலி ஸ்டைலில் இடம்பெறும் 20 நிமிட காட்சிகள் தான் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த 20 நிமிட காட்சியை எடுப்பதற்காக படகுழு தங்களது முழு உழைப்பையும் போட்டுள்ளது என்றும். சிவகார்த்திகேயன் இந்த காட்சிகளுக்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் என்றும் பட குழு தெரிவித்துள்ளது. அது போக இந்த படத்தில் காமெடி காட்சிகளின் பொறுப்பை சூரியின் தலையில் சுமத்திவிட்டு நடிகர் சிவா ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட் என்று முழு வீச்சில் இறங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.