சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 பட Transformation வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை அடுத்து இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிரின்ஸ். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
மாவீரன் படம்:
இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவந்து இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்தார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
ராணுவ அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சிவகார்த்திகேயன் சில மாதங்களாகவே எங்கு சென்றாலும் தலையில் கருப்பு நிற குல்லா அணிந்து கொண்டு செல்கிறார். இது குறித்து பலருமே கேள்வி எழுப்பியிருந்தார்கள்.அதற்கு சிவகார்த்திகேயன், அடுத்த படத்திற்கான லுக் வரும் வரையில் இதனை கலற்ற கூடாது என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
அதற்காக தான் நான் இதை அணிந்திருக்கிறேன். எவ்வளவு வெயில் அடித்தாலும் இதனை நான் போட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் தான் நான் இந்த குல்லாவை அணிந்து கொண்டிருக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.