வீட்டில் திருடிய ஸ்விக்கி டெலிவரி பையனுக்கு ஆதரவு கொடுத்த சோனு சூட் – குவியும் கண்டனங்கள்

0
235
- Advertisement -

ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபருக்கு ஆதரவாக நடிகர் சோனு சூட் போட்ட பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இந்தியாவில் மிகப் பிரபலமான திரைப்பட நடிகர்களில் ஒருவர் சோனு சூட். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் 1999ஆம் ஆண்டு தமிழ் சினிமா மூலம் தான் நடிகனாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோ என்று சொல்லலாம். இவர் மனித நேயம் கொண்டவர். அதிலும் கொரோனா காலகட்டம் துவங்கியது முதல் இவர் பல உதவிகளை செய்து வந்தார்.

- Advertisement -

சோனு சூட் செய்த உதவி:

மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இதேபோல கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.

ஸ்விக்கி டெலிவரி பையன் செய்த வேலை:

அதோடு விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார். கொரோனாவிற்கு பிறகும் அவரிடம் பல நூறு மக்கள் உதவி கேட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபருக்கு சோனு ஸ்வீட் செய்திருக்கும் உதவி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபர் ஒருவர் கஸ்டமர் உடைய வீட்டில் உணவை கொடுத்துவிட்டு வீட்டின் வெளியே இருந்த ஷூக்களை எல்லாம் திருடி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் படு வைரலானது.

-விளம்பரம்-

சோனு பதிவு:

இது குறித்து பலருமே நெகட்டிவான கமெண்ட்ஸ்களை போட்டிருந்தார்கள். இதை பார்த்த சோனு சூட், டெலிவரி செய்யும் நபர் உணவை கொடுத்த பிறகு ஷூக்களை திருடி சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவருக்கு ஒரு ஜோடி ஷூக்களை வாங்கி கொடுங்கள். அது அவருக்கு தேவைப்படலாம். அன்பாக இருங்கள் என்றெல்லாம் என்று கூறி இருந்தார். சோனுடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றாலும், சிலர் அவரை விமர்சித்து எதிர்மறையாக பதிவிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதில், கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். பலர் கடினமாக உழைத்து தான் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். திருடுவதை நியாயப்படுத்துவது சரியானது கிடையாது. ஒரு செயின் பறிப்பவர் தங்க செயினை பறித்துவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு புது சங்கிலி வாங்கி கொடுங்கள், அது அவருக்கு உண்மையிலேயே தேவைப்படலாம். அன்பாக இருங்கள் என்று கூறுவீர்களா? கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வது வேறு. தப்பு செய்தவர்களை திருத்துவது வேறு என்றெல்லாம் சோனு சூட்டுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்

Advertisement