இந்த மூன்று பொருட்கள் இல்லாம SPB ரெக்கார்டிங் செய்ய மாட்டார் – இசையமைப்பாளர் சொன்ன சீக்ரெட்

0
312
- Advertisement -

இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பின்னணி பாடலை பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம் . இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்.

-விளம்பரம்-

அதோடு இவர் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றவர். இவர் முதன் முதலாக 1966 ஆம் ஆண்டில் இருந்து தான் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன்முதலாக சாந்தி நிலையம் என்ற படத்தில் தான் பாடினார். ஆனால், அந்த திரைப்படம் வெளிவதற்கு முன்பே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த அடிமைப்பெண் படத்தில் அடிமைப்பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.

- Advertisement -

எஸ் பி பாலசுப்ரமணியம் குறித்த தகவல்:

இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த பாடலின் மூலம் இவர் கோலிவுட் மிகப் பிரபலமான பாடகர் ஆனார். அதனை தொடர்ந்து இவர் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது பிரபலமாக இருக்கும் அனிருத் என அனைத்து இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது புதுமுக இசை அமைப்பாளர்கள் உடனும் இவர் பணிபுரிந்து இருக்கிறார்.

எஸ் பி பியின் இறப்பு :

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றின் காரணமாக எஸ்பிபி அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். மேலும், எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

இசை அமைப்பாளர் நிவாஸ் பேட்டி:

இவரின் இழப்பு பேரிழப்பாக இருந்தாலும் இன்றும் அவர் பாடிய பாடல் வழியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் எஸ் பி பாலசுப்ரமணியம் குறித்த சுவாரசிய தகவலை பற்றி தான் இங்கு பார்க்கிறோம். அதாவது, பிரபல இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் இணைந்து பாலசுப்ரமணியம் கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தில் பாடி இருந்தார்.

spb

எஸ்பிபி குறித்த சுவாரசிய செயல்கள்:

அப்போது எஸ்பிபி செய்த சில செயல்கள் குறித்து நிவாஸ் பேட்டியில் கூறியிருப்பது, எஸ்பிபி பாட வரும்போது எப்போதுமே மூன்று நிறத்தில் பேனாக்களை வைத்திருப்பார். எங்கு எப்படி பாட வேண்டும் என்பதை அந்த கலர் பேனாக்களை கொண்டு அவருக்கு ஏற்ற வகையில் குறித்துக் கொள்வார். அந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? ஹீரோ ஹீரோயின்கள் யார் என்பதை தெரிந்து கொண்டுதான் பாடுவார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement