SPB மூச்சு விடாமல் பாடியது ஏமாற்று வேலை – கங்கைமரன் சொன்னது உண்மையா ? Spbயே மேடையில் சொன்ன உண்மை.

0
1903
Spb
- Advertisement -

மறைந்த பாடகர் எஸ்பிபியின் பிறந்தநாள் இன்று அவரை குறித்து பலரும் அறியாத சில சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பின்னணி பாடலை பாடியவர் எஸ் பிபாலசுப்ரமணியம் .

-விளம்பரம்-

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதோடு இவர் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுகளையும் பெற்றவர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோன தொற்றின் காரணமாக எஸ்பிபி அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.

- Advertisement -

மேலும், எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் இழப்பு பேரிழப்பாக இருந்தாலும் இன்றும் அவர் பாடிய பாடல் வழியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று எஸ் பி பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள். ஆகையால், அவரை குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவலைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

எஸ்பிபி பாடகர், நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவு தெரிய வைத்தது மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் தான். இந்த படத்தில் பாலச்சந்தர் தான் இவரை நடிக்க வைத்தார். அதற்குப்பின் இவரை கதாநாயகன் ஆக்கியது இயக்குனர் வசந்த் தான். கேளடி கண்மணி படத்தில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி திரைத்துறை உலகில் கொடி கட்டி பறந்த எஸ்பிபிக்கு சினிமாவில் வருவதற்கு முன்பு என்ஜினியராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதற்காக இவர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், உடல் குறைவு காரணமாக இவரால் தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. அதற்கு பிறகு தான் இவர் சினிமாவில் நுழைந்தார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், இவர் முறையாக கர்நாடக இசை பயிலவில்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் பாடி தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

மேலும், கேளடி கண்மணி படத்தில் மூச்சு விடாமல் எஸ் பி பாடி இருந்தது குறித்து பலரும் கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், அந்த பாடலுக்கு முன்னரே இளையராஜா இசையில் கண்மணியே காதல் என்பது என்ற பாடலை பாடியிருக்கிறேன் என்று சிரித்து கொண்டே சொன்னார். அதே போல மேடை ஒன்றில் இதுகுறித்து பேசி இருக்கும் பாலசுப்பிரமணியம் தான் அந்த பாடலை மூச்சு விடாமல் பாடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

மேலும், அந்த படத்தை இயக்கிய வசந்த் ‘இந்த பாடலை நீங்கள் மூச்சுவிடாமல் பாட வேண்டும்’ என்று சொன்ன போது நான் செத்துட்டா அப்போ மீது படத்தை யார வச்சி முடிப்ப என்று கேலியாக சொன்னாராம்.ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசிய கங்கை அமரன் ‘ன் அந்த பாடல் பாடும் போது அதனை நான் மூச்சு விட்டுத்தான் பாடினேன், இதனை பார்த்தவுடன் அண்ணன்(இளையராஜா) ரெகார்ட் பணிக்கோ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் நானும் பாலுவும் ஒன்றாக பேசி எந்த வரி வரை ஒருவர் பாட வேண்டும் பின்னர் அடுத்த வரியை யார் பாட வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக பாடி சேர்த்த பாடல்தான் அந்த மூச்சு விடாமல் பாடிய பாட்டு. அது ஒரு ஏமாற்று வேலை. பாலசுப்பிரமணி மூச்சு விடாம பாட வில்லை பாடவும் முடியாது. ‘ என்று பேசி இருந்தார். அப்போது அவரை பலரும் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement