காதலன்,ஜீன்ஸ் என்று சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய SPBயின் மகள், பாடுவதை நிறுத்திய காரணம் குறித்து அவரே சொன்ன விஷயம்.

0
192
Pallavi
- Advertisement -

சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ் பி பியின் மகள் பாடுவதை நிறுத்திய காரணம் குறித்து பேசி இருக்கிறார். இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். பாடகர் எஸ்பிபி அவர்கள் 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

-விளம்பரம்-

எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. மேலும், இவருடைய உடல் சென்னையிலுள்ள தாமரைபாக்கம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அதோடு இவருடைய நினைவு நாளை ஒட்டிகடந்த ஆண்டு மக்கள் பலர் இரங்கல் தெரிவிக்க இருந்தனர் . ஆனால், யாரையுமே அங்கு அனுமதிக்கப்படவில்லை. கொரோனா காரணத்தினால் தான் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் எஸ்.பி.பியின் மகள் பல்லவி தமிழில் பல பாடல்களை பாடி இருக்கிறார்.  ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ஹைரா ஹைரா மற்றும் காதலன் படத்தில் இடம்பெற்ற “காதலிக்கும் பெண்ணின்” மிகப்பெரிய ஹிட் அடித்தது. மருத்துவரான இவர் ஒருகட்டத்தில் பாடுவதை நிறுத்திவிட்டார். இப்படியொரு நிலையில் சினிமாவில் படுவதை நிறுத்திய காரணம் குறித்து பேசிய அவர் ‘  என்னுடைய அப்பா மிகப்பெரிய பிரபலமாக இருந்தாலும் நான் வெளியே என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். எனக்கு வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை.

படிப்பு முடிந்த பின் குடும்ப வாழ்க்கையில் இறங்கிய பின்னர் மீண்டும் கேமரா முன்னால் வருவதற்கு எனக்கு விருப்பம் இல்லாமல் போனது. மேலும், அதற்கான அவசியமும் வரவில்லை.  எஸ்.பி.பி.யின் மகள் என்று சில வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஒரு சில காரணங்களுக்காக நான் பாடுவதை நிறுத்தி விட்டேன். குடும்பத்தினருடன் பிஸியாகி விட்டதால் அதன் மீது விருப்பம் போய்விட்டது.

-விளம்பரம்-

அதே போல முறைப்படி பயிற்சி எடுக்காமல் மீண்டும் களமிறங்கினால் அது சரியாகவும் இருக்காது’ என்று கூறியுள்ளார். மேலும், தந்தையின் இறப்பு குறித்து பேசி அவர் ‘கொரோனா காலகட்டத்தில் அவர் ஹைதராபாத்திற்கு சென்றிருந்தார். அங்கே தான் அவருக்கு தொற்று ஏற்பட்டது. அவரை ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டாம் என்று சொல்லாமல் இருந்தது என்னுடைய மிகப்பெரிய தவறு என்று நினைக்கிறேன்.

ஒருவேளை நான் அவரை தடுத்திருந்தார் அவர் அங்கே சென்றிருக்க மாட்டார் அவருக்கு தொற்றும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த எண்ணம் இன்னமும் எனக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது.ஆனால் எப்போதும் அவர் என்ன அப்படி பாவம் செய்தார், அவருக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது என்று எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அவர் தற்போது இல்லை என்றாலும் அவருடைய பாடல்கள் மூலம் அவர் நம்மை சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று பலரும் சொல்வார்கள்.

அதனால் ஏதோ ஒரு ஊரில் அவர் இன்னமும் வாழ்ந்து கொள்ள தான் இருக்கிறார் என்று நாங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவரைப் பற்றி யோசித்தாலே நான் மிகவும் நொறுங்கி விடுவேன். அவரைப் பற்றி எண்ணம் வந்தாலே அவர் மருத்துவமனையில் இருந்த தருணங்கள் தான் கண் முன்னே வந்து செல்லும். அவருக்கு போய் ஏன் இவ்வளவு கஷ்டம், அவருக்கு இப்படி நடந்து இருக்கவே கூடாது என்று தோன்றும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement