ஸ்ரீதேவி உடல் இன்று இந்தியா வராது ! துபாய் public prosecution துறை மறுப்பு – காரணம் இதுதான்

0
1137
Sri devi

நடிகை ஸ்ரீதேவி நேற்று முந்திபம் 24ஆம் தேதி இறந்துள்ளார். துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அறையில் வந்து தங்கியுள்ளார் ஸ்ரீதேவி. அதன்பின்னரே இறந்துள்ளார்.

Sridevi

துபாயை பொறுத்த வரை ஸ்ரீதேவி ஒரு வெளிநாட்டு குடியுரிமை பெற்ற நபர். இதனால் அசார் இறந்த உடன் இந்திய தூதரகத்திற்கு முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியான விசாரணை முடிந்த பின்னர் தான் இந்தியாவிற்கு அவரது உடல் அனுப்பப்படும்.

ஸ்ரீதேவியின் இந்த வழக்கை துபாயின் பப்ளிக் பிராசக்யுசன் டிப்பர்ட்மெண்ட் விசாரித்து வருகிறது. ஸ்ரீதேவியின் மரணம்.சற்று மர்மமானது. ஏனெனில் முதலில் மாரடைப்பால் இறந்தார் என செய்திகள் வந்தது. பின்னர் மருத்துவமனை அறிக்கையில் உடலில் ஆல்கஹால் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக முறையான விசாரணை நடித்திய பின்னரே அவரது உடல் இந்திய அரசு வசம் ஒப்படைக்கப்படும். ஸ்ரீதேவியின் மரணம் சந்தேகமான சாவு என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

actress-sridevi

தற்போது இன்று இரவு அவரது உடல் இந்தியா வரும் என கூறப்பட்டாலும் அவரது உடலுக்கான முழு பரிசோதனை இன்னும் முடியவில்லை. இதனால் அந்த பரிசோதனைகள் அனைத்தும் முடிந்தவுடன் இந்திய தூதரகத்தின் மூலம் அவரது உடல் நாளை காலை இந்தியா அனுப்பபடும்.