கடவுள் துர்கையுடன் பாடகி சின்மையை ஒப்பிட்ட நடிகை ஸ்ரீரெட்டி..!

0
422
Srireddy-Chinami

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பின்னணி பாடகி சினமையி தமிழ் சினிமாவின் மூத்த கவிஞராக கருதப்படும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சின்மையை தொடர்ந்து பல்வேறு பெண்களும் #metoo என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களுக்கு  நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

பாடகி சின்மையின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வந்த நிலையில் நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார் போன்றவர்களும் சின்மையை பாராட்டி அவருக்கு ஆதரவாக பேசி இருந்தனர். என்னதான் தற்போது பல பெண்களும் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வந்தாலும் கமல்நாயகன் படத்தில் கூறுவது போல இதற்கு வேதை ஸ்ரீரெட்டி போட்டது தான்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்பே தெலுகு மற்றும் தமிழ் சினிமாவில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பல சர்ச்சையான விடயங்களை கூறி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது இவரும் பாடகி சின்மையை பாராட்டி அவரை துர்க்கா தேவி என்று புகழந்துள்ளார்.

துர்கா பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் நடிகை ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் துர்கா பூஜை வாழ்த்துக்களை தெரிவித்தார் . அதில் பெண்கள் அனைவரும் துர்கா கடவுளின் அவதாரம் என்று குறிப்பிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, சின்மையின் தைரியத்தை பாராட்டியதோடு, நீங்களும் துர்கா தேவி தான் என்று சின்மையை கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement