சுஷாந்த் அனுப்பிய கடைசி மெசேஜ். பத்திரிக்கையாளர் ஷாக்கிங் பதிவு.

0
88700
sushanth
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய திரையுலகில் பல துக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றது. இந்திய சினிமாவில் மிக பிரபலமான ரிஷி கபூர், இர்பான் கான், சிரஞ்சீவி சார்ஜா, டாக்டர் சேதுராமன் போன்ற பல நடிகர்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் பாலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. ஆரம்பத்தில் இவர் நடன கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
sushanth

அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார். ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சுஷாந்த் சிங் மூச்சு திணறலால் உயிரிழந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுஷாந்த் சிங் மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் சுஷாந்த் சிங் கடைசியாக தனக்கு அனுப்பிய மெசேஜை தற்போது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சுஷாந்த் அவர்கள் கூறி இருப்பது, சார் நான் விரும்பிய அனைத்தும் நான் பெற்று விட்டேன்.

யாருடைய இருப்பு மற்றும் மறைவிற்காக எனது மன அமைதி மற்றும் புன்னகையுடன் நான் பேரம் பேச விரும்பவில்லை. இத்துடன் எல்லாம் நன்றாக மாறப்போகிறது. காலை வணக்கம் என்று மெசேஜ் அனுப்பினார் என்று கூறியுள்ளார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மைத்துனரும், காவல்துறை அதிகாரியுமான ஓ.பி. சிங் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement