படத்துல அப்படி நடிச்சா நிஜத்திலும் அப்படித்தான் இருப்பயா ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னார் – சுஹாஷினி Flashback

0
3831
- Advertisement -

நான் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்ததற்கு காரணம் கே. பாலச்சந்தர் தான் என்று நடிகை சுகாசினி அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஹாசினி. தற்போது இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், தொகுப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் சாருஹாசனின் மகள் அவர்.

-விளம்பரம்-

மேலும், இவரது அப்பாவின் சகோதரர் உலக நாயகன் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழும் மணிரத்தினத்தின் மனைவி ஆவார். மேலும், நடிகை சுஹாசினி தமிழ் சினிமாவில் “நெஞ்சத்தை கிள்ளாதே” என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகினார். இவர் அதற்க்கு முன்பே உதிர் பூக்கள், காளி , ஜானி போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார்.

- Advertisement -

சுஹாசினி திரைப்பயணம்:

பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, நடிகை சுஹாசினி 2003ஆம் ஆண்டு வெளியான “stumble” என்ற ஆங்கில படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கதாபாத்திரத்தில் படங்களில் நடித்த வந்த சுஹாசினி 80ஸ் களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார்.

சுஹாசினி நடித்த படங்கள்:

தற்போது கூட மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதில் சுஹாசினி மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுஹாசினி அவர்கள் பிரபலங்களை வைத்து தற்போது நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் சுகாசினி கலந்து இருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சுஹாசினி சொன்னது :

அப்போது அதில் அவர் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்தது குறித்து கூறியிருந்தது, கே பாலசந்தர் சாருடன் இருந்த பழக்கம் அனைவரும் அறிந்த ஒன்றே. மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி போன்ற அவருடைய இயக்கத்தில் நான் நடித்தேன். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் எனக்கு கே பாலச்சந்தர் சார் அறிவுரை வழங்குவார். அப்போது ஒரு முறை நான் என்னுடைய தங்கையின் திருமணத்திற்காக பத்திரிக்கை கொடுக்க கே பி சாரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

திருமணம் குறித்து சொன்னது:

அவர் என்னை அழைத்துப் பேசினார். என்ன மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பியா? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னார். அவர் சொன்ன பிறகுதான் நான் மணிரத்தினத்தை கல்யாணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணத்திற்கு காரணம் அவர்தான். எப்போதும் நான் மணிரத்தினம் இருவரும் கதைக்குறித்து பேசினால் இந்த டயலாக் பாலச்சந்தர் சார் படத்தில் வருவது போல இருக்க வேண்டும், ஹீரோ கமலஹாசன் மாதிரி நடிக்க வேண்டும் என்று பேசுவோம் என்று கூறியிருந்தார்.

Advertisement