ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள “சர்கார் ” படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை (ஆகஸ்ட் 24 ) முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஒரு வேலை “சர்கார் ” படத்தின் பாடல் வெளியிட்டு தொடர்பான அறிவிப்பாக இருக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.An important announcement about #Sarkar will be made this evening. Get ready!
— Sun Pictures (@sunpictures) August 24, 2018
நேற்று(ஆகஸ்ட் 23) தல நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று (ஆகஸ்ட் 24) தளபதி படத்தின் முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடயிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




