சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களில் ஏகோபித்த ஆதரவை பெற்றார்கள். இசை புயல் ஏ ஆர் ரகுமான் கூட இவர்களது பாடல்களை கேட்டு மிகவும் மெய் சிலிர்த்து பாராட்டி இருந்தார்.
தற்போது பல்வேறு படங்களில் பாடல்களை பாடி வரும் செந்தில் கணேஷ், கரிமுகன் என்ற படத்தில் கதாயகனாகவும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் செய்த உதவி கேளிக்கைக்கு உள்ளானது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல லட்சத்தை பரிசாக வென்ற இந்த தம்பதியினர் நிவாரண பொருட்கள் என்ற பெயரில் 3 ரூபாய் மதிப்புள்ள டைகர் பிஸ்கெட்களை நிவாரண பொருட்களாக அளித்துள்ளனர்.இதனால் பலரும் இவரை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் கறிமுகன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செந்தில் கணேஷ் இதுகுறித்து விளக்கமளிகையில், பலரும் நான் 3 ரூபாய் பிஸ்கேட் கொடுத்ததாக கிண்டல் செய்கின்றனர். நான் ஒன்றும் பாதிக்கப்பட்ட மக்களை கேவலமாக என்னவில்லை. நானும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். நான் உடனடியாக எதாவது உதவி செய்ய வேண்டுமே என்று தான் பிஸ்கேட் வாங்கி சென்றேன். அதனை பலரும் தப்பாக கிண்டல் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.