கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கஜா புயல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை புரட்டி போட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும், பிரபலங்களும், பொது மக்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தமிழக மக்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சில ரசிகர்கள் பதாகை ஏந்தியுள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது.இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டி நேற்று (நவம்பர் 25) நடைபெற்றது.
இந்த போட்டியின் போது மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக #Save Delta #Gaja Cyclone Relief போன்ற பதாகைகளை ஏந்தியுள்ளார்.அந்த ரசிகர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரசிகர்கள் என்பது தெரியவந்துள்ளது.