‘பாராட்டுக்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா? ரஜினியின் ‘ஜெயிலர்’ பதிவு குறித்து மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

0
448
sureshkamatchi
- Advertisement -

ரஜினியின் ஜெயிலர் பதிவிற்கு சுரேஷ் காமாட்சி பதிவிட்டிருக்கிற டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குவித்து பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : கயல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் யாருன்னு தெரியுமா? இவங்க தானாம்.

- Advertisement -

தலைவர் 169 படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட நெல்சன் படங்களில் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

படத்தின் பெயர் போஸ்டர்:

இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் தான் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்த போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும் படக்குழுவிற்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு சுரேஷ் காமாட்சி போட்டு இருக்கும் டீவ்ட் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

சுரேஷ் காமாட்சி டீவ்ட்:

சிம்பு நடித்த மாநாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஜெயிலர் படத்தின் போஸ்டர் வெளியானது எடுத்து ரஜினிக்கும் பட குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து சுரேஷ் காமாட்சி ட்வீட் போட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, எத்தனை குதிரைகள் ஓடினாலும் ரஜினிகாந்த் என்ற இந்த குதிரை விழும், சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற மூன்றெழுத்து மேஜிக் #ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும்.

கண்டனம் தெரிவித்த சுரேஷ் காமாட்சி:

வாழ்த்துக்கள் நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் என்று பதிவு செய்திருந்தார். இப்படி சுரேஷ் காமாட்சியின் பதிவு குறித்து ஊடகமொன்று ரஜினியை அவர் கிண்டல் செய்வதாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்திக்கு கண்டனத்தை தெரிவித்து சுரேஷ் காமாட்சி மீண்டும் பதில் ட்வீட் போட்டு இருக்கிறார். அதில் அவர், பாராட்டிற்கும், கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க எழுத வந்த இப்படித்தான் பூடம் தெரியாம சாமியாடுவாங்க என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement