சூர்யா சாரும் நானும் இரண்டாம் பாகம் பத்தி நிறைய பேசியிருக்கோம்- விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் – சூப்பர் ஹிட் பட இயக்குனர் பேட்டி.

0
23972
surya

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அந்த வகையில் இவருடைய சினிமா வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் சிங்கம் படமும் ஒன்று. இந்த படத்தை வைத்து இரண்டாம், மூன்றாம் பாகம் எல்லாம் எடுத்தார்கள். அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 2010ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சிங்கம். இந்த படத்தில் சூர்யா, அனுஷ்கா செட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இயக்குநர் விக்ரம் குமார் - சூர்யா

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகம் எல்லாம் எடுத்தார்கள். அதுவும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் சிங்கம் படத்தை போலவே தற்போது சூர்யாவின் இன்னொரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அது சூர்யா வில்லனாகவும், ஹீரோவாகவும் கலக்கிய 24 படம் தான். இந்த படம் வெளியாகி நான்கு வருடங்கள் கடந்துவிட்டது.

இதையும் பாருங்க : பிரியா பவானி சங்கரை போல நடிப்பிற்காக வேலையை விட்ட செய்தி வாசிப்பாளர். பேஸ்புக் மூலம் அடித்த வாய்ப்பு.இன்னோரு நடிகையின்

- Advertisement -

இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து, தயாரித்த படம் 24. இந்த படம் 2016 ஆம் ஆண்டு திரையரங்களில் வெளியானது. இந்த படத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன், சத்யன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்று தந்தது.

இயக்குநர் விக்ரம் குமார் - நடிகர் சூர்யா - ஒளிப்பதிவாளர் திரு

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் 2 தேசிய விருதைத் தட்டிச் சென்றது. இந்நிலையில் இந்த 24 படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இயக்குனர் விக்ரம் குமார் இடம் கேட்டபோது அவர் கூறியது, முதலில் நான் தெலுங்கில் வெளியான மனம் படத்தை தான் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்தேன். அதற்கு பிறகு என்னிடம் இருந்த 24 படத்தின் கதையை அவரிடம் சொன்ன போது இந்த படம் எடுக்கலாம் என்று சூர்யா சொன்னார்.

-விளம்பரம்-

மேலும், பெரிய பட்ஜெட் படம் என்பதால் சூர்யாவே படத்தை தயாரித்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்முறையில் இந்த படம் வெளியே வந்தது. இந்த படத்திற்காக சூர்யா நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார். அவருடன் பணி புரிந்ததை என்னால் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு சூர்யா கடின உழைப்பாளி. மேலும், 24 படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பிளான் ரொம்ப நாளாவே இருக்கு. அதற்க்கான கதையும் எழுதிகொண்டு இருக்கிறேன். சும்மா சீக்வெல் எடுக்க வேண்டும் என்று அதை எடுக்கக்கூடாது. இந்த 24-2 படம் முதல் பாகத்தை விட மாஸாக இருக்க வேண்டும். சூர்யா சாரும் நானும் 24 படத்தின் இரண்டாம் பாகம் பத்தி நிறைய பேசியிருக்கோம். கதை முழுமையடைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். எல்லோருக்குமே இந்த படம் நிச்சயம் பிடிக்கிற மாதிரி தான் கதை இருக்கும் என்று கூறினார்.

Advertisement